ஆகஸ்டு 30, 2016
வங்கிகளுக்கிடையே ஹிந்திகட்டுரைப்போட்டி இந்திய ரிசர்வ் வங்கி - 2016-17
வங்கியியல் குறித்த கருத்துக்கள் ஹிந்தியில் எழுதப்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் இந்திய ரிசர்வ் வங்கி வங்கியாளர்களுக்கிடையே கட்டுரைப் போட்டியை நடத்திவருகிறது. ஆட்சிமொழிப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் தவிர, அனைத்து வங்கி அதிகாரிகள், பணியாளர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். 2016-17-ம் ஆண்டிற்காக கட்டுரைப் போட்டிக்குப் பின்வரும் 3 தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைப்பற்றி பங்கேற்பாளர்கள் கட்டுரையை அனுப்பலாம். கட்டுரை வந்துசேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 30, 2016 (புதன்கிழமை).
போட்டிக்கான விதிமுறைகள் இணைப்பு “A”-யில் குறிப்பிடப்பட்டுள்ளன. பங்கேற்கும் அதிகாரி / பணியாளர் அளிக்கவேண்டிய சான்றிதழின் படிவம் இணைப்பு “B”-யில் உள்ளது. அனைத்துப் பொதுத்துறை வங்கிகள் (பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட) மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த சுற்றறிக்கையிலுள்ள தகவலை தத்தம் அலுவலகத்திலுள்ள பணியாளர்கள் அறியும்படி தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கு பரவலாக விளம்பரம் செய்யும்பொருட்டு, வங்கிகள் தத்தம் உள்ளக பத்திரிக்கைகள்/ பிரசுரங்கள் மற்றும் வலைதளங்களில் இந்த சுற்றறிக்கையின் தகவலைப் பிரசுரித்துத் தெரிவிக்கலாம்.
(அஜித் பிரசாத்) உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–2017/540
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்