செப்டம்பர் 23, 2016
உட்பொதிந்த எழுத்தில்லாமல், நோட்டின் வரிசை எண்கள் அளவில் ஏறுமுகமாக, தடவிப் பார்த்து உணரும் வகையில் அச்சு இல்லாத ₹ 50 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு
இந்திய ரிசர்வ் வங்கி, 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வரிசை வங்கி நோட்டுகளில் ஆளுநர் Dr. ரகுராம் G. ராஜன் அவர்கள் கையெழுத்துடன், நோட்டின் முன்புறம் எண்களுக்கான இரு பகுதிகளிலும் உட்பொதிந்த எழுத்தில்லாமல், பின்புறத்தில் நோட்டு அச்சிடும் ஆண்டு “2016“ என்பது அச்சடிக்கப்பட்ட ₹ 50 மதிப்பிலக்க ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடுகிறது.
கீழ்க் குறிப்பிட்டவை தவிர, தற்போது வெளியிடப்படவிருக்கும் நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள இருபக்கமும் வரிசை எண்கள் அளவில் ஏறுமுகமாக, உள்ள மகாத்மா காந்தி வரிசை – 2005, ₹ 50 வங்கி நோட்டுகளை ஒத்ததாக இருக்கும்.
முன்புறம்:
தடவி உணரும் அச்சு
எண் ‘50’, இந்திய ரிசர்வ் வங்கியின் முத்திரை, மகாத்மா காந்தியின் உருவப் படம், இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர், உத்தரவாதம் மற்றும் உறுதிமொழிப் பகுதி, ஆளுநர் கையொப்பம், அசோகர் தூண் சின்னம் ஆகியவை தடவி உணரும் வகையில் மேலெழும்பித் தெரியும் வண்ணம் இதுநாள் வரை அச்சிடப்பட்டிருக்கும். அவை யாவும் தற்போது சாதரணமாக அச்சடிக்கப்பட்டிருக்கும் (தடவி உணரும் வகையில் மேலெழும்பியில்லாமல்). மேலும் நோட்டின் இடப்பக்கம் இருந்த சதுர வடிவக் குறியீடு நீக்கப்படுகிறது.
வண்ணம்
நோட்டின் பின்பக்க வண்ணத்தில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால், முன்புறம் சற்றே மங்கிய (தடவி உணரும் அச்சுமுறை நீக்கப்பட்டதால்) வண்ணத்தில் இருக்கும்.
மறைந்திருக்கும் பிம்பம்
மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு வலப்புறம் உள்ள செங்குத்துப் பகுதியில் மதிப்பிலக்க எண் ‘50’ என்பது மறைவாகத் தெரியும்படி இருக்கும். அது கண்ணளவு உயரத்தில் நோட்டை குறுக்கு வாக்கில் பிடித்துப் பார்த்தால் தெரியும். இந்த அம்சம் இனி இருக்காது.
பின்புறம்
நோட்டின் பின்புறத்தில் மாற்றம் ஏதுமில்லை.
ரூபாய் நோட்டின் மாதிரி வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.
இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ₹ 50 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு - 2016-2017/751
|