அக்டோபர் 05, 2016
இந்திய ரிசர்வ் வங்கி, கோகுல் கோ-ஆபரேடிவ் அர்பன் பேங்க் லிமிடெட்,
செகந்தராபாத்திற்கு வழங்கப்பட்ட உத்தவுகளை
ஏப்ரல் 04, 2017 வரை நீட்டிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, பொதுமக்கள் நலன் கருதி, இது தேவை என்பதில் திருப்தியடைந்து கோகுல் கோ-ஆபரேடிவ் அர்பன் பேங்க் லிமிடெட், செகந்தராபாத்திற்கு வழங்கப்பட்ட உத்தவுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கிறது. ஆகவே, இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 35 (A) (1)-ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, கோகுல் கோ-ஆபரேடிவ் அர்பன் பேங்க் லிமிடெட், செகந்தராபாத் வங்கிக்கு ஏப்ரல் 04, 2016 (வேலைநேரம் முடிந்தபின்) முதல் வழங்கப்பட்ட உத்தரவுகளை, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து, ஏப்ரல் 04, 2017 வரை (மறுஆய்வுக்குட்பட்டு) அமலாக்கம் செய்கிறது.
மேற்குறிப்பிட்ட உத்தரவிலுள்ள இதர கட்டளைகள் நிபந்தனைகள் ஆகியவற்றில் மாற்றங்களில்லை.
செப்டம்பர் 30, 2016 தேதியிட்ட உத்தரவின் நகல் பொதுமக்கள் பார்வைக்காக வங்கிக் கட்டிடத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/865 |