அக்டோபர் 14, 2016
இந்திய ரிசர்வ் வங்கி, HCBL கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், லக்னோ,
உத்தரப்பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட உத்தவுகளை
ஏப்ரல் 15, 2017 வரை நீட்டிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, HCBL கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், லக்னோ, உத்தரப்பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட உத்தவுகளை, அக்டோபர் 16, 2016 முதல் மேலும் 6 மாதங்களுக்கு (மறு ஆய்வுக்குட்பட்டு) ஏப்ரல் 15, 2017 வரை நீட்டிக்கிறது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 35 (A)-ன்கீழ் வழங்கப்பட்ட ஏப்ரல் 10, 2015 தேதியிட்ட உத்தரவின் மூலம் இந்த வங்கி ஏப்ரல் 16, 2015 முதல் (வேலைநேர முடிவிலிருந்து) கட்டுப்பாட்டு உத்தரவுகளின் கீழ் இருந்து வந்தது. இந்த உத்தரவு திருத்தப்பட்டு, அதன் காலம்அக்டோபர் 15, 2016 வரை நீட்டிக்கப்பட்டது. அது இப்போது மீண்டும் அக்டோபர் 07, 2016 தேதியிட்ட உத்தரவின்மூலம் அமலாக்க்க் காலம் ஏப்ரல் 15, 2017 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த உத்தரவின் இதர கட்டளைகள், நிபந்தனைகளில் மாற்றமில்லை. அக்டோபர் 07, 2016 தேதியிட்ட இந்த உத்தவின் நகல் பொதுமக்கள் பார்வைக்காக வங்கிக் கட்டிடத்தில் வைக்கப்படும்.
சூழ்நிலைக்கேற்ப, இந்திய ரிசர்வ் வங்கி இந்த உத்தரவில் சில மாற்றங்களை செய்யக்கருதிடும்.
(அனிருத்த D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/928 |