அக்டோபர் 19, 2016
இந்திய ரிசர்வ் வங்கி, தி தும்கூர் வீரசைவ கோ-ஆபரேடிவ்
பேங்க் லிட்., தும்கூர், கர்னாடகா மீது அபராதம் விதிக்கிறது
தனிநபர் தவிர இதர வங்கிக் கணக்குகளைத் தொடங்கும்போது வாடிக்கையாளர்கள் கண்காணிப்பு தொடர்பாக ஜூலை 01, 2015 தேதியிட்ட KYC/AML வழிகாட்டுதல்களின் (மூலச் சுற்றறிக்கை) 3.2.2.1 (B) (iv) (d)-ல் கூறியுள்ளபடி செயல்படாததற்காகவும், ஏப்ரல் 11, 2015 தேதியிட்ட சுற்றறிக்கையில் உள்ளபடி, கடந்த ஆண்டின் லாபத்தில் 1 சதவீத்த்திற்கும் அதிகமாக நன்கொடை வழங்குதல் குறித்த அறிவுறுத்தல்களை மீறியதாற்காகவும், இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 10 லட்சத்தை தி தும்கூர் வீரசைவ கோ-ஆபரேடிவ் பேங்க் லிட்., தும்கூர், கர்னாடகாவிற்கு அபராதமாக விதித்துள்ளது. வங்கிகள் ஒழுங்கு முறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) பிரிவு எண் 47 (A) (1) (b) மற்றும் 46 (4)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி மேற்குறிப்பிட்ட ஆணையைப் பிறப்பித்துள்ளது.
இதற்கு விளக்கமளிக்கக் கோரி இந்த வங்கிக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது. வங்கி இதற்கு எழுத்துமூலமாகப் பதில் அளித்த்து. அதையும் உண்மை விபரங்களையும் ஆய்ந்து பார்த்ததில், வங்கிகள் ஒழுங்குமுறை சட்டப்பிரிவினை மீறியது உறுதிபடுத்தப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து அதற்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு - 2016-2017/971 |