நவம்பர் 13, 2016
மகாத்மா காந்தி வரிசையில் (புதிய) உட்பொதிந்த “L” என்ற எழுத்துடன்
₹ 500 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு
இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை (புதிய) வங்கி நோட்டுகளை ஆளுநர் டாக்டர் உர்ஜித் R. படேல் அவர்கள் கையெழுத்துடன், நோட்டின் முன்புறம் வரிசை எண்களுக்கான இரு பகுதிகளிலும் “L” என்ற உட்பொதிந்த எழுத்துடன், பின்புறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2016“ என்றும் மற்றும் சுத்தமான பாரதம் இலச்சினையும் அச்சிடப்பட்ட ₹ 500 மதிப்பிலக்க நோட்டுகளை விரைவில் வெளியிடுகிறது.
இந்தப் புதிய ₹ 500 வங்கி நோட்டுகள் முன்னர் இருந்த குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகள் வரிசையிலிருந்து வர்ணம், அளவு, கருத்து, பாதுகாப்பு அம்சங்கள் அமைந்துள்ள இடம் மற்றும் வடிவமைப்புகள் ஆகியவற்றில் வேறுபட்டுள்ளன. அவற்றின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
தடவி உணரும் அச்சு வகையில் அமைந்த மகாத்மா காந்தி உருவப்படம், அசோகத் தூண் சின்னம், குறுக்குக் கோடுகள், வலதுபுறம் ₹ 500 எண்ணுடன் வட்ட வடிவம் மற்றும் அடையாளக் குறியீடு போன்ற பார்வைக் குறைபாடுடையவர்களும் மதிப்பிலக்கத்தை இனம் கண்டுகொள்ளும் வண்ணம் அமைந்துள்ள அம்சங்களும் இந்த வங்கி நோட்டுகளில் உள்ளன.
நவம்பர் 08, 2016 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீட்டு எண் 2016-2017/1146 மூலம் முன்னர் வெளியிடப்பட்ட வங்கி நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும்.
அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு - 2016-2017/1196 |