நவம்பர் 08, 2016
₹ 2,000 வங்கி நோட்டுகள் வெளியீடு
இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை (புதிய) வங்கி நோட்டுகளை உட்பொதிந்த எழுத்தில்லாமல், ஆளுநர் டாக்டர் உர்ஜித் R. படேல் அவர்கள் கையெழுத்துடன் , பின்புறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2016“ என்று குறிப்பிடப்பட்ட ₹ 2,000 மதிப்பிலக்க நோட்டுகளை விரைவில் வெளியிடுகிறது. வான்வெளியில் கோள்கள் செல்லும் பாதையில் நம் நாட்டிலிருந்து செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் மங்கள்யானை எடுத்துக் காட்டும் உருவப்படம் நோட்டின் பின்புறத்தில் உள்ளது. நோட்டின் வர்ணம் மெஜந்தா. இந்த நோட்டில் வர்ணத்தோடு பொதுவாக இணைந்த வகையில் ஜியோமிதி வடிவங்கள் வேறு வடிவமைப்புகள் முன்புறமும் பின்புறமும் உள்ளன.
இந்த வங்கி நோட்டுகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
முன்புறம்
1. ஊடுருவிப் பார்க்கும் வண்ணம் வெண்மைநிற எழுத்துக்களில் மதிப்பிலக்கம் 2000.
2. மறைந்திருக்கும் வகையில் மதிப்பிலக்கம் 2000 என்பது எழுதப்பட்டிருக்கும்.
3. மதிப்பிலக்கம் 2000 தேவநாகிரியில் எழுதப்பட்டிருக்கும்.
4. மகாத்மா காந்தியின் உருவப்படம் நடுவில்.
5. நுண்ணிய எழுத்துக்கள் “RBI” மற்றும் “2000” நோட்டின் இடதுபுறம் இருக்கும்.
6. ஜன்னல் போன்ற அமைப்பில் ஊடுருவிச் செல்லும் பாதுகாப்பு இழை भारत, RBI, 2000,
ஆகியவை வர்ணம் மாறும் வகையில் எழுதப்பட்டிருக்கும். நோட்டை
அசைத்துப்பார்த்தால் இவை பச்சையிலிருந்து நீலமாக நிறம் மாறும்.
7. உத்தரவாதம், ஆளுநர் கையெழுத்து, உறுதிமொழி ஆகியவை நோட்டின் வலப்புறம்.
8. மதிப்பிலக்கம் 2000 என்பது ரூபாயின் குறியீடு ₹ உடன் நோட்டின் கீழ்ப்புறம் வலது பக்கத்தில்
நிறம் மாறும் வகையில் (பச்சையிலிருந்து நீலமாக) எழுதப்பட்டிருக்கும்.
9. அசோகாத் தூண் சின்னம் வலப்புறம். மகாத்மா காந்தியின் உருவப்படம் மற்றும் 2000
என்ற எண்ணும் நீர்க்குறியீடாக இருக்கும்.
10. நோட்டின் வரிசை எண்கள் இருபக்கமும் (மேலே இடப்புறம், கீழே வலப்புறம்) அளவில்
சிறியதிலிருந்து பெரியதாக ஏறுமுகமாகத் தோன்றும் வகையில் அச்சிடப்படிருக்கும்.
பார்வைக் குறைபாடு உடையவர்களுக்காக
மகாத்மா காந்தி உருவப்படம், அசோகாத்தூண் சின்னம், குறுக்குக் கோடுகள் மற்றும் அடையாள வடிவம் ஆகியவை தடவி உணரும் அச்சு வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
11. வலப்புறம் குறுக்கு வாக்கில் சிறிய செவ்வக வடிவம், மேலெழும்பிய வகையில் ₹ 2000.
12. ஒரு சாய் கோணத்தில் வரையப்பட்ட ஏழு குறுக்குக் கோடுகள் இடப்புறம் மற்றும் வலப்புறம் மேலெழும்பிய வகையில் அச்சிடப்பட்டிருக்கும்.
பின்புறம்
13. இடப்புறம் அச்சிடப்பட்ட ஆண்டு.
14. “தூய்மை இந்தியா“ சின்னம், அதன் கருத்து வாசகத்துடன்.
15. இந்திய மொழிகளின் வரிசை நோட்டின் மையப்பகுதியை நோக்கி.
16. மங்கள்யானின் உருவப்படம்.
17. நோட்டின் மதிப்பிலக்கம் 2000 என்று தேவநாகரியில்.
நோட்டின் அளவு 66 மி.மீ. X 166 மி.மீ.
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1144 |