நவம்பர் 15, 2016
குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகள் செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கப்பட்டன – கூட்டுறவு வங்கிகள் அறிவுறுத்தல்களைக் கடுமையாகக் கடைபிடிக்க இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் (குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகள்) செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கப்பட்டது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை, சில கூட்டுறவு வங்கிகள் சீராகக் கடைபிடிக்கவில்லையென்று தகவல்கள் வந்துள்ளன. குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகளை மாற்றுதல் மேலும் அவற்றை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை சரிவர முழுமையாகக் கடைபிடிப்பதன் அவசியத்தை நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கு அவைகளின் மண்டல அலுவலகங்கள் மூலமாகவும் மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு நபார்டு வங்கி மூலமாகவும் வலியுறுத்தி அறிவுறுத்தியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.
(அல்பனா கில்லவாலா) முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1215
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்