நவம்பர் 18, 2016
விற்பனை முனையங்களில் பணம் எடுத்தல் – பணம் எடுக்க
வரம்பு மற்றும் வாடிக்கையாளர் கட்டணங்கள் – தளர்த்தப்பட்டன
இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 14, 2016 தேதியிட்ட அறிவுறுத்தல்கள் மூலம் வங்கிகளில் சிறுசேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் நவம்பர் 10, 2016 முதல் டிசம்பர் 30, 2016 வரை அனைத்து ATM-களிலும் நடத்தும் அனைத்து வகை பரிவர்த்தனைகளுக்கும் (பரிசீலனைக்குட்பட்டு) வங்கிகள் கட்டணங்கள் ஏதும் வசூலிக்கக் கூடாதென்று அறிவுறுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களை மையப்படுத்தும் மற்றுமோர் நடவடிக்கையாக அனைத்து இடங்களில் உள்ள (Tier I முதல் Tier VI வரை) விற்பனை முனையங்களில் இவ்வசதி உள்ள அனைத்து வர்த்தக மையங்களிலும் பணம் எடுப்பதற்கான வரம்பு ஒரேசீராக ஒரு நாளைக்கு ரூ.2000 என்று விதிக்கப்பட்டுள்ளது. இவ்வகைப் பரிவர்த்தனைகளுக்கு ஏதேனும் வாடிக்கையாளர் கட்டணங்கள் இருப்பின், டிசம்பர் 30, 2016 வரை அவை (பரிசீலனைக்குட்பட்டு) விலக்கிக்கொள்ளப்படுகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி முன்னர் ஆகஸ்டு 27, 2015 தேதியிட்ட DPSS. CO. PD. No. 449/ 02.14.003/2015-16 சுற்றறிக்கை முலம், Tier I முதல் Tier II-ல் உள்ள விற்பனை முனையங்களில் ரூ. 1000 வரையும் Tier III முதல் Tier VI வரை உள்ள விற்பனை முனையங்களில் ரூ. 2000 வரை பணம் எடுக்க அனுமதி அளித்துள்ளது நினைவு கூறத்தக்கது.
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1255
|