அக்டோபர் 21, 2016
சென்ட்ரல் பேங்க் ஆப் மியான்மாருடன், “மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்றம்” ஆகியவற்றிற்காக,
இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU), “மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்ற”த்திற்காக மியான்மார் நாட்டின் மைய வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் மியான்மாருடன் அக்டோபர் 19, 2016 அன்று கையெழுத்திட்டுள்ளது.
தலைநகர் புதுதில்லியில் பாரதப் பிரதமர் மேதகு திரு. நரேந்திர மோடி அவர்களும் மற்றும் மியான்மர் நாட்டின் ஆலோசகர் திரு. அவுங்க் சேன் சூ கீ அவர்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், பேங்க் ஆப் மியான்மார் சார்பாக, வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. U. க்யாவ் டின் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பாக வங்கியின் துணை ஆளுநர் திரு. S.S. முந்த்ரா அவர்களும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மேற்பார்வைத் தகவலைப் பகிர்ந்திடவும், அதிக அளவில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், சில நாடுகளின் மேற்பார்வைத் துறையினரிடையே, ஒத்துழைப்பை அதிகரிக்கவும் மற்றும் மேற்பார்வை பற்றிய தகவல் பரிமாற்றத்திற்காகவும், இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் மேற்பார்வைத் துறையில் ஒத்துழைப்புக்கான கடிதம் ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் சேர்த்து, இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை 34 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒரு மேற்பார்வை ஒத்துழைப்பிற்கான கடிதம் மற்றும் ஒரு ஒத்துழைப்பு அறிக்கை ஆகியவற்றைச் செய்துள்ளது.
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/995 |