அக்டோபர் 24, 2016
₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் உட்பொதிந்த “L” என்ற எழுத்துடன்
இரண்டு பக்கத்திலும் வரிசை எண்கள் ஏறுமுகமாக சிறியதிலிருந்து பெரியதாக,
தடவி உணரும் அச்சு வகையில் இல்லாமல் வெளியிடுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை-2005 வங்கி நோட்டுகளில் இருபுறமும் உள்ள வரிசை எண்களில் “L” என்ற உட்பொதிந்த எழுத்துடன், ஆளுநர் டாக்டர் ரகுமான் G. ராஜன் அவர்கள் கையெழுத்துடன், பின்புறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2016“ என்று குறிப்பிடப்பட்ட ₹ 20 மதிப்பிலக்க நோட்டுகளை வெளியிடுகிறது.
ஏறுமுகமாக சிறியதிலிருந்து பெரியதாக உள்ள வரிசை எண்கள், தடவி உணரும் அச்சு இல்லாமல், மறைந்திருக்கும் உருவம் இல்லாமல், அடையாளக் குறியீடு இல்லாமல் சமீபத்தில் வெளியிடப்பட்ட, மகாத்மா காந்தி வரிசை-2005-ஐச் சேர்ந்த ₹ 20 மதிப்பிலக்க நோட்டுகளில் உள்ளதைப்போலவே, தற்போது வெளியிடப்படும் இந்த நோட்டுகளின் வடிவம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அமைந்திருக்கும். தடவி உணரும் அச்சு இல்லாலத்தால் நோட்டின் முன்புறம் வர்ணம் சற்றே மங்கியதுபோல் இருக்கும். (குறிப்பு – செப்டம்பர் 15, 2016 தேதியிட்ட பத்திரகை வெளியீட்டு எண் 2016-17 / 678).
முன்னர் வெளியிடப்பட்ட அனைத்து ₹ 20 மதிப்பிலக்க நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1004 |