நவம்பர் 30, 2016
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்)
சட்டப்பிரிவு 35A-ன்கீழ் இந்தியன் மெர்க்கன்டைல் கூட்டுறவு வங்கி லிட்., லக்னோ,
உத்திரப்பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவுகளை இந்திய ரிசர்வ் வங்கி
திருத்தியமைக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி தனது நவம்பர் 25, 2016 தேதியிட்ட கட்டுப்பாட்டு உத்தரவுகள் மூலம் இந்தின் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கிக்கு ஏற்கனவே வெளியிட்ட அக்டோபர் 19, 2015 தேதியிட்ட உத்தரவுகளைப் பகுதியளவு மாற்றியமைத்தது. முதன்முதலாக ஜுன் 04, 2014 தேதியிட்ட உத்தரவுகள் மூலம், இந்த வங்கி ஜுன் 12, 2014 முதல் கட்டுபாபடுகளின் கீழ் வைக்கப்பட்டது.
அக்டோபர் 19, 2015 தேதியிட்ட உத்தரவுகளின்படி, பல நிபந்தனைகளுக்கிடையே, பின் வருவனவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்து. இந்த வங்கியின் வாடிக்கையளர் தனது சேமிப்பு/ நடப்பு எந்தவகையான வைப்புக் கணக்கிலிருந்தும் (குறைந்தபடசம் ரூ. 1,00,000 அதிகபட்சம் ரூ. 15,00,000 வரை நிலுவை உள்ள) இருப்பிலுள்ள தொகையில் 70 சதவிகிதம் வரை எடுக்க அனுமதி உண்டு. இந்திய ரிசர்வ் வங்கி இந்த வங்கியின் நிதிநிலையை மறுஆய்வு செய்து, பொதுமக்கள் நலன் கருதி மேற்குறிப்பிட்ட உத்தரவுகளை திருத்தியமைக்க முடிவு செய்தது.
அதன்படி வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 சட்டப்பிரிவு (எண் 35A (1) மற்றும் (2), பிரிவு எண் 56 உடன் சேர்த்துப் படிக்க)–ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, அக்டோபர் 19, 2015 அன்று இந்தியன் மெர்க்கன்டைல் கூட்டுறவு வங்கி லிமிட்டெட்டுக்கு வெளியிடப்பட்ட உத்தரவின் பாரா 3, பின்வருமாறு திருத்தியமைக்கப்படுகிறது.
அக்டோபர் 19, 2015 தேதியிட்ட உத்தரவுகளின்படி, பல நிபந்தனைகளுக்கிடையே, உத்தரவுகளுக்குப் பின்னர், கீழ் வருவனவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்து. இந்த வங்கியின் வாடிக்கையளர் தனது சேமிப்பு/ நடப்பு/ எந்தவகையான ரூ. 1,00,000 மேலாக நிலுவை உள்ள வைப்புக் கணக்கிலிருந்தும், இருப்பிலுள்ள தொகையில் 70 சதவிகிதம் வரை எடுக்க அனுமதி உண்டு. ஆனால், இது ஒரு நிபந்தனைக்கு உட்பட்டது. பணமெடுக்க விரும்பும் வைப்புதார்ர் வங்கிக்குத் தரவேண்டிய பாக்கி (ஏதாவது கடன் அல்லது பிணைப்பொறுப்பு) இருக்குமானால், அவர் வைப்பிலுள்ள இருப்புத் தொகை முதலில் இதற்காக கழிக்கப்படும்.
இந்தியன் மெர்க்கன்டைல் கூட்டுறவு வங்கிக்கு வெளியிடப்பட்ட ஜுன் 04, 2014 தேதியிட்ட உத்தரவிலுள்ள இதர கட்டளைகள், நிபந்தனைகள் மாற்றமின்றி மார்ச் 11, 2017 (வேலை நேரம் முடியும் வரை) வரை மறுபரிசீலனைக்குட்பட்டு தொடரும்.
(அனிருத்தா D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1372 |