டிசம்பர் 13, 2016
இந்திய ரிசர்வ் வங்கி, பாலி கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட்,
பாலி, ஹவ்ரா, மேற்கு வங்காளத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவு
விலக்கிக்கொள்ளப்படுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி, நவம்பர் 06, 206 தேதியிட்ட வழிகாட்டுதல் மூலமாக, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப் பிரிவு எண் 35A மற்றும் சட்டப்பிரிவு 56 உடன் இணைந்தும் அவற்றின்கீழ் பாலி கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், பாலி, ஹவ்ரா, மேற்கு வங்காளத்திற்கு உத்தவுகளை பிறப்பித்தது. மறு ஆணை வெளியிடப்படும் வரை, நவம்பர் 14, 2006 அலுவலக நேர முடிவிலிருந்து மேற்படி வங்கிக்கு வழங்கிய உத்தரவுகள் (அவ்வப்போது புதுப்பிக்கப்படும்) அமலாக்கம் செய்யப்படும்.
பொதுநலன் கருதி, இது தேவையென்பதில் திருப்தியடைந்து, இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப் பிரிவு எண் 35A (2) மற்றும் சட்டப் பிரிவு எண் 56-ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, டிசம்பர் 07, 2016 முதல், பாலி கூட்டுறவு வங்கி லிட்., பாலி, ஹவ்ரா, மேற்குவங்கித்திற்கு மேற்படி விதிக்கப்பட்ட உத்தரவுகளை விலக்கிக்கொள்கிறது. எனினும், இந்த வங்கி செயல்பாட்டு நடைமுறைக்காக விதிக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி தொடர்ந்து இயங்கும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1505 |