டிசம்பர் 16, 2016
மகாத்மா காந்தி (புதிய) வரிசையில் “E” என்ற உட்பொதிந்த எழுத்துடன் வரிசை
எண்களில் “நட்சத்திர”க் குறியீட்டுடன் 500 ரூபாய் நோட்டுகள் வெளியீடு
இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி (புதிய) வரிசையில், இருபக்க வரிசை எண்களிலும் உட்பொதிந்த “E” என்ற எழுத்துடன், வங்கியின் ஆளுநர் டாக்டர் உர்ஜித் R. படேல் அவர்களின் கையெழுத்துடன், பின்புறம் அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2016” என்பதோடு தூய்மை பாரதம் இலச்சினையுடன் 500 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகளை விரைவில் வெளியிடும்.
மேற்குறிப்பிட்ட இந்த வங்கி நோட்டுகள் சிலவற்றில் வரிசை எண்கள் பகுதியில் முன்புறமுள்ள எழுத்துகளுக்கும் எண்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் “ * “ (நட்சத்திர) குறியீடு இருக்கும். இவ்வாறு “ * “ குறியீடு உள்ள நோட்டுகள் உள்ள கட்டுகளில் 100 நோட்டுகள் வழக்கம்போல் இருக்கும். ஆனால், நோட்டுகளின் எண்கள் வரிசைப்படி இருக்காது. இவ்வாறு நட்சத்திரக் குறியீடு உள்ள நோட்டுகள் அடங்கிய கட்டுகளை எளிதில் அடையாளம் காண உதவிடும் வகையில், அந்த நோட்டுக் கட்டின் பட்டை மீது இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். 500 ரூபாய் மதிப்பிலக்கத்தில் இப்போதுதான் முதன் முறையாக நட்சத்திர நோட்டுகள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறு நட்சத்திரக் குறியீடு கொண்ட 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளன. இத்தகு நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதற்கான காரணம் மற்றும் இது அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் குறித்த விரிவான விவரங்கள் ஏப்ரல் 19, 2006 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீடு 1337-ல் கொடுக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 08, 2016 முதல் மகாத்மா காந்தி (புதிய) வரிசையில், வெளியிடப்பட்ட அனைத்து ரூ.500 மதிப்பிலக்க நோட்டுகளும் தொடர்ந்து செல்லுபடியாகும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1549 |