பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் திட்டம் (PMGKDS) 2016 |
டிசம்பர் 16, 2016
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் திட்டம் (PMGKDS) 2016
இந்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியோடு கலந்தாலோசித்து பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் திட்டம் (PMGKDS) 2016-ஐ அறிவித்துள்ளது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் யோஜனா (PMGKDS) 2016 திட்டத்தின்கீழ், இதுவரை கணக்குக் காட்டப்படாத வருமானத்தை ஏவரேனும் அறிவித்தால், அவர்கள், இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். டெபாசிட் தொகை அறிவிக்கப்பட்ட (கணக்குக் காட்டப்படாத ) வருமானத்தில் 25 சதவிகிதத்திற்கும் குறையாமல் இருக்கவேண்டும். இந்த டெபாசிட் தொகை, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் (இந்திய அரசால் குறிப்பிடப்படுகின்ற) டிசம்பர் 17, 2016-லிருந்து (சனிக்கிழமை) மார்ச் 31, 2017 (வெள்ளிக்கிழமை) வரை டெபாசிட் செய்யலாம். இந்த டெபாசிட் தொகை, இந்திய ரிசர்வ் வங்கி பராமரிக்கும் பாண்ட்ஸ் லெட்ஜர் அக்கவுண்டில் (BLA) போடப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி அளிக்கப்படும். இத்திட்டம் பற்றிய விவரங்களை https://rbi.org.in என்ற இணையதளத்திலிருந்து தளவிறக்கம் செய்துகொள்ளலாம்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1555 |
|