டிசம்பர் 19, 2016
வங்கிகள் 2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகளை
டெபாசிட்டுகளாக ஏற்றுக்கொள்ளவேண்டும்
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் 2005-ம் ஆண்டுக்கு முந்தைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை டெபாசிட்டுகளாக ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், இவைகளை மீண்டும் புழக்கத்திற்கு விடக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய அரசால் வெளியிடப்பட்ட கெஜட் அறிவிப்பு எண் 2652/ 8.11.2016-ன்படி, நவம்பர் 09, 2016-லிருந்து ரூ. 500 மற்றும் ரூ.1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் (குறிப்பிட்ட வங்கி நோட்டுகள்), இந்திய ரிசர்வ் வங்கியால் ஏற்கனவே உள்ள வரிசையில் வெளியிடப்பட்டவை, அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டவாறு சட்டப்படி செல்லும் தகுதியை இழக்கின்றன. எனவே, குறிப்பிட்ட வங்கி நோட்டுகளில் ரூ. 500 மற்றும் ரூ.1000 மதிப்பிலக்கங்கள் கொண்ட 2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகளையும் உள்ளடக்கியதாகும்.
2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகளை, வர்த்தக வங்கிகள் வாங்க மறுப்பதாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்களிடமிருந்து கேள்விகளும் / புகார்களும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வந்துகொண்டிருப்பதால், இந்திய ரிசர்வ் வங்கி இந்த தெளிவாக்கத்தை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்துவது என்னவென்றால், ஜுன் 30, 2016 அன்று வெளியிடப்பட்ட அதன் உத்தரவுகளின்படி 2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகளை, பொதுமக்கள் மாற்றிக்கொள்ளும் வசதி ஜூலை01, 2016லிருந்து, இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ்க்கண்ட அலுவலகங்களில் மட்டுமே மாற்றிக்கொள்ளும் வசதி உண்டு. ஆனால் இதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து 2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகளை வங்கிகள் டெபாசிட்டுகளாக ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கருதக்கூடாது. 2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதி இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ்க்கண்ட அலுவலகங்களில் உண்டு.
அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஷ்வர், சண்டிகர், சென்னை, கௌஹாத்தி, ஹைதராபாத், ஜெய்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னௌ, மும்பை, நாக்பூர், புதுதில்லி, பாட்னா, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1565 |