நவம்பர் 17, 2016
இந்திய ரிசர்வ் வங்கி அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் வருமானவரித் தொகையை முன்கூட்டியே செலுத்துங்கள் – டிசம்பர் 2016
டிசம்பர் மாதக் கடைசியில் ரிசர்வ் வங்கியில் வருமான வரியை செலுத்த வருபவர்களின் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பது தெரியவருகிறது. இதன் பொருட்டு, முடிந்த அளவில் கூடுதல் முகப்புகள் அமைக்கப்பட்ட போதிலும், செலுத்தப்படும் வரிப் பணத்திற்கான ரசீதுகளை அளிப்பதில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பது வங்கிக்கு சிரமமாகவே உள்ளது. பொதுமக்கள் தேவையின்றி அதிகநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் அசெளகரியங்களைக் குறைக்கும் வகையில் கடைசி நேர நெருக்கடியைத் தவிர்த்து வருமான வரி செலுத்துவோர் வரித்தொகையை கடைசி நாளுக்கு வெகு முன்னதாகவே செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வருமான வரித் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு மும்பையிலுள்ள பின்வரும் 29 முகவர் வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த முகவர் வங்கிக் கிளைகளில் பெரும்பாலானவை இணையதளம் மூலம் வரி செலுத்தும் வசதிகளையும் அளிக்கின்றன. வருமான வரி செலுத்துவோர் தங்கள் செளகரியத்திற்கேற்ப இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
(அனிருத் D. ஜாதவ்) உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2016-2017/1236
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்