பணமாற்று வசதிகளில் நீர்மத்தன்மை வசதிக்கான ஏற்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது |
நவம்பர் 26, 2016
பணமாற்று வசதிகளில் நீர்மத்தன்மை வசதிக்கான ஏற்பாடுகளை
இந்திய ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது
ரூ. 500 மற்றும் ரூ. 1000 சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து (குறிப்பிட்ட நோட்டுகள் என்றே அவை இனி சுட்டிக்காட்டப்படும்) விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து, நவம்பர் 09, 2016 முதல் வங்கிகளில் டெபாசிட்டுகள் பெருமளவு (கடன் வசதியோடு ஒப்பிடுகையில்) அதிகரித்து வங்கி முறைமையில் நீர்மத்தன்மை மிகவும் அதிகமாகிவிட்டது. இது அடுத்த இருவாரங்களில் இன்னும் அதிகரிக்க்க் கூடுமேன்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பொருட்டு, இந்த உபரியான பணவரவை சமன் செய்யும் வகையில், தற்காலிகமாக ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வைத்திருக்கும் ரொக்க இருப்பின் கூடுதல் அளவு விகிதத்தைப் (CRR) பின்வருமாறு அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
ரொக்க இருப்பு விகிதம் (நிலுவையிலுள்ள நிகர கேட்பு மற்றும் காலப் பொறுப்புகளின் (NDTL ) சதவிகிதமாக - 4 %ஆக மாற்றமின்றி இருக்கும்.
-
செப்டம்பர் 16, 2016-க்கும் நவம்பர் 11, 2016-க்கும் இடைப்பட்ட கால கட்டத்தில் அதிகரித்துள்ள NDTL அளவின் 100 சதவிகிதத்தை நவம்பர் 24, 2016-ல் தொடங்கும் அரைமாத காலத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியிடம் ரொக்க வைப்பாக வைக்கவேண்டும். குறிப்பிட்ட நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டதால் ஏற்பட்டுள்ள அதிகப்படியான நீர்மத்தன்மையை உள்வாங்கி அதே சமயம், ஆக்கப்பூர்வ துறைகளுக்குக் கடன் தேவைகளைப் பூர்த்திசெய்ய இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் CRR தேவை என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் உள்ளக நீர்மத்தன்மை மேலாண்மை வசதிக்காக, வங்கி முறைமையில் உள்ள அதிகப்படியான பணத்தை உள்வாங்கிக் கொள்ளும் தற்காலிக ஏற்பாடே. இது டிசம்பர் 09, 2016 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ மறு ஆய்வு செய்யப்படும்.
-
வங்கிகளின் பணக் கருவூலக் கிளைகளில் டெபாசிட் செய்தோ அல்லது இந்திய ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்தோ குறிப்பிட்ட வங்கி நோட்டுகளின் மதிப்பை உடனடியாகப் பெறும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவாதத் திட்டத்தை புதுப்பித்துள்ளது. இது கூடுதல் CRR தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வங்கிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.
செயல்பாட்டு உத்தரவுகள் சுற்றறிக்கையாகத் தனியே வெளியிடப்படுகிறது.
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1335 |
|