டிசம்பர் 21, 2016
வங்கி நோட்டுகள் விநியோகம் – நவம்பர் 10, 2016 முதல் டிசம்பர் 19, 2016 வரை
நவம்பர் 08 , 2016 நள்ளிரவு முதல் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் சட்டபடி செல்லுபடியாகும் தன்மையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கி தேவையான பல்வேறு மதிப்பிலக்க நோட்டுகளை வங்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளது.
நவம்பர் 10, 2016 முதல் டிசம்பர் 19, 2016 முடிய வங்கி முகப்புகள் மூலமும், ஏடிஎம்-களின் மூலமும் ரூ. 5,92,613 கோடி மதிப்பிலான வங்கி நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகித்துள்ளதாக வங்கிகள் அறிவித்துள்ளன.
இதே காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் கிளைகள் மூலமாக மொத்த எண்ணிக்கையில் 22.6 பில்லியன் நோட்டுகளை (வெவ்வேறு மதிப்பிலக்கத்தில்) பொதுமக்களுக்கு விநியோகம் செய்துள்ளது. அவற்றுள் 20.4 பில்லியன் நோட்டுகள், 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் போன்ற சிறு மதிப்பிலக்க நோட்டுகளில் அளிக்கப்பட்டன. 2.2 பில்லியன் நோட்டுகள் 2000 மற்றும் 500 ரூபாய் மதிப்பிலக்கங்களில் அளிக்கப்பட்டன.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1602 |