டிசம்பர் 23, 2016
இந்திய ரிசர்வ் வங்கி வங்கிக் குறை தீர்ப்பாளர் அலுவலகத்தை
டேராடூனில் திறக்கிறது
வங்கிகள் முறைமையில் சமீபகாலத்தில் பெருகிவரும் இணைப்பினாலும், தற்சமயம் கான்பூரில் வங்கிக் குறைதீர்ப்பாளர் அலுவலகத்தின் ஆட்சிப் பரப்பெல்லை பரந்து விரிந்ததாக இருப்பதால், இந்திய ரிசர்வ் வங்கி டேராடூனில் வங்கிக்குறைதீர்ப்பாயத்தைத் திறந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியிலுள்ள வங்கிக்குறைதீர்ப்பாளர் அலுவலகம் டேராடூன் பகுதிகளின் ஆட்சி எல்லைகளாவன: உத்தரகாண்ட் மாநிலம் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்திலுள்ள ஏழு மாவட்டங்கள், அவையாவன - ஷஹரன்பூர், ஷமிலி (பிரபுத் நகர்), முஸாஃபர் நகர், பாக்பத், மீரட், பிஜ்நர் மற்றும் அம்ரோஹா (ஜ்யோதிபா ஃபுலே நகர்) .இவை கான்பூர் வங்கிக் குறைதீர்ப்பாளர் அலுவலகத்தின் ஆட்சிப் பரப்பெல்லைக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்தவை.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016-2017/1642 |