பிப்ரவரி 27, 2017
கௌஜல்கி அர்பன் கூட்டுறவு கிரெடிட் வங்கி லிமிடெட், கௌஜல்கி,
கர்நாடகா மீது இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, கௌஜல்கி அர்பன் கூட்டுறவு கிரெடிட் வங்கி லிமிடெட், கௌஜல்கி மீது ரூ. 1.00 லட்சம் பண அபராதத்தை விதிக்கிறது. இதனைப் பின்வரும் காரணத்திற்காக விதிக்கிறது. வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும், சட்டப்பிரிவு எண் 47 A (1) (b) மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, “வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு, நிதித் திட்டம் 2014” மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களை அறிதல் / கருப்புப் பண ஒழிப்பு குறித்த (KYC/AML) வழிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் மேற்படி அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் கோரி அறிவிப்பினை அனுப்பியது. அதற்கு வங்கி, தனிப்பட்ட முறையில் பதிலளிப்பதற்கு கால அவகாசம் கேட்டு, இரண்டு முறை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆயினும் வங்கி நேரில் ஆஜராகவில்லை. நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யவும் இல்லை.இது குறித்த உண்மைகளையும், வங்கி பதிலளிக்காததையும் கருத்தில் கொண்டதில், வங்கியின் அத்துமீறல்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால், அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2293 |