மார்ச் 10, 2017
நிதியியல் கல்வி உபகரணங்கள்
பொதுமக்களுக்காக நிதிக்கல்வி குறித்த தகவல்களை அளிக்கும்பொருட்டு, FAME (Financial Awareness Messages) என்ற பெயரில் விழிப்புணர்வு தகவல்களை ஒரு சிறுபுத்தக வடிவில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அமைப்பு / பொருள் / நடுநிலை சார்ந்த 11 விழிப்புணர்வு தகவல்கள் அதில் உள்ளன. உதாரணங்கள் பின்வருமாறு – ஒரு வங்கிக் கணக்கு தொடங்கும்போது “உங்கள் வாடிக்கையாளரை அறிவீர்“ (KYC) நிபந்தனைகளுக்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் விவரங்கள், திட்டமிட்டு, பட்ஜெட் போட்டு செலவழித்தல், சேமித்தல், பொறுப்புடன் கடன் வாங்குதல், கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தி நல்ல கடன் மதிப்பீடு பெறுதல், வாயில் அருகே அல்லது வீட்டின் அருகில் உள்ள பகுதியில் வங்கிச்சேவை பெறுதல், வங்கியிடம், வங்கிக் குறை தீர்ப்பாளரிடம் புகார் அளிக்கும் செயல்முறை, மின்னணு ஊடக முறையிலான பண அனுப்பீடுகள் பயன்படுத்தும் முறைகள், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்/ அமைப்புகளில் மட்டுமே முதலீடு செய்தல் ... போன்றவை. நிதிச் சேவை, வங்கிச்சேவை மற்றும் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, மின்னணு ஊடக முறைக்கு மாறுதல், மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு இவற்றை மேம்படுத்தலே இந்த முயற்சியின் நோக்கமாகும். இந்த புத்தகம் பிராந்திய மொழியில் https://www.rbi.org.in/commonman/English/Scripts/fame.aspx என்ற இணைய முகவரியில் தளவிறக்கம் செய்தால் கிடைக்கும்.
ஒருங்கிணைக்கப்பட்ட பணமாற்று இடைமுகம் UPI (Unified Payment Interface) மற்றும் *99# முறைசாரா கூடுதல் சேவை தகவல் USSD (Unstructured Supplementary Service Data) ஆகியவை குறித்த விளம்பர அறிவிப்புகளைத் தளவிறக்கம் செய்து பிராந்திய மொழிகளில் பெறலாம்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2426 |