மார்ச் 10, 2017
இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியன் மெர்கன்டைல் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், லக்னோவ் உத்தரப்பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட உத்தவுகளை நீட்டிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியன் மெர்கன்டைல் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், லக்னோவ் உத்தரப்பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட உத்தவுகளை, மேலும் 6 மாதங்களுக்கு மார்ச் 12, 2017 முதல் செப்டம்பர் 11, 2017 வரை (மறு ஆய்வுக்குட்பட்டு) நீட்டிக்கிறது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 35 (A) (1)-ன்கீழ் இந்த வங்கிக்கு வழங்கப்பட்ட ஜுன் 04, 2014 தேதியிட்ட உத்தரவின் மூலம் இவ்வங்கி ஜுன் 12, 2014 முதல் கட்டுப்பாட்டு உத்தரவுகளின் கீழ் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, மேற்குறிப்பிட்ட இந்தக் கட்டுப்பாட்டு உத்தரவு திருத்தப்பட்டது / அதன் செயல்பாட்டுக் காலம் நீட்டிக்கப்பட்ட தேதிகள் ஜூலை 30, 2014, டிசம்பர் 08, 2014, ஜுன் 02, 2015, செப்டம்பர் 07, 2015, அக்டோபர் 129, 2015, டிசம்பர் 07, 2015, மார்ச் 04, 2016, செப்டம்பர் 02, 2016 மற்றும் நவம்பர் 25, 2016. கடைசியாக இந்த உத்தரவின் காலம் மார்ச் 11, 2017 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இது தற்போது, மார்ச் 12, 2017 முதல் செப்டம்பர் 11, 2017 வரை 6 மாதங்களுக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மார்ச் 09, 2017 தேதியிட்ட திருத்தப்பட்ட உத்தரவின் மூலம் மறுஆய்வுக்குட்பட்டு வெளியிடப்படுகிறது. திருத்தப்பட்ட உத்தரவினால், வங்கியின் கடனாளிகள் டெபாசிட்டுகள் ஏதேனும் வைத்திருந்தால், அவற்றை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நேர்செய்ய அனுமதி அளிக்கப் படுகிறது. பொதுமக்கள் பார்வையிடும் வகையில், இந்த உத்தரவின் நகல் வங்கிக் கட்டிடத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவுகளில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் வெளியிடப்படுவதன் காரணமாக, இந்த வங்கியின் நிதிநிலை மேம்பட்டதாகவோ அல்லது நலிவுற்றதாகவோ கருதக்கூடாது. சூழ்நிலைக்கேற்ப ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்கள் செய்யக்கருதிடும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–2017/2428 |