மார்ச் 02, 2017
UDAY திட்டத்தின் கீழ் சிறப்பு பத்திரங்களை தனிப்பட்ட
வகையில் தெலுங்கானா அரசு வெளியிடுகிறது
தெலுங்கானா அரசு, சிறப்புப் பத்திரங்களை ரூ. 8,922.93 கோடி மதிப்பிற்கு உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா திட்டத் (Ujjwal Discom Assurance Yojna-UDAY) தின் கீழ் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் சந்தை முதலீட்டாளர்கள் தனது ஏலத் தொகை விவரங்களை, கீழே குறிப்பிட்டுள்ள படிவத்தில் மார்ச் 06, 2017 காலை 10.30 முதல் 12.00 மணி வரை மின்னஞ்சல் மூலம் அளிக்கலாம்.
முதலீட்டாளர் பெயர் |
உரிய ஆண்டின் FIMMDA வருவாய்க்கு அதிகமாக அளிக்கப்படும் அதிக வருவாய் |
பங்கேற்க முன்வரும் தொகை |
|
|
|
மார்ச் 07, 2017-செவ்வாய் அன்று பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்வு அளிக்கப்படும். இதற்கான கட்டளைகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு –
-
சிறப்புப் பத்திரங்களின் முகமதிப்பு ரூ. 100.
-
பத்திரங்கள் சம அளவில், 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15- ஆண்டுகால முதிர்வுடையதாக வெளியிடப்படும். ஒரு முதலீட்டாளர் இவை அனைத்திலும் சீராக பங்கீடு செய்யும் வகையில், ஏலத்தொகையை அளித்து, அவ்வாறே ஒதுக்கீடு செய்யப்படும் வகையில் பத்திரங்களை வாங்கிடவேண்டும்.
-
குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ. 100 கோடி.
-
மார்ச் 03, 2017 நாளின் முடிவில் FIMMDA அளிக்கும் அரசுப்பத்திர வருவாய் விகிதத்தோடு ஒத்துப்போகும்படி அடிப்படை விகிதம் இருக்கும்.
-
FIMMDA-வின் அரசுப்பத்திர வருவாயுடன் 75 அடிப்படைப் புள்ளிகள் சேர்த்து, ஏலதாரர் கோரும் வருவாய் விகிதம் சீராக அடிப்படை விகிதத்துடன் இணைக்கப்பட்டு, கூப்பன் விகிதம் (ஆண்டுக்கு இருமுறை அளிக்கப்படும்) நிர்ணயிக்கப்படும்.
-
ஒவ்வொரு முதிர்வுகால பத்திரத்திலும் ‘பல்வகை விலை ஏலமுறை’ முறையில் (SDL போலவே) பத்திரம் வெளியிடப்படும். வரையறுக்கப்பட்ட ஏலத்தொகையை விடக்குறைவான அளவில் (விலையில்) கோரியவர் வெற்றிபெற்றால், வித்தியாசத்தொகை ஊக்கத்தொகையாக செலுத்தப்படவேண்டும்.
-
போட்டியாளர்கள் அளிக்கும் வருவாய் விகித வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவர்.
-
எந்தவொரு ஏலதாரரின் ஏலத்தையும் விருப்பம்போல் ஏற்கவோ மறுக்கவோ வங்கிக்கு தனி உரிமை உண்டு.
இந்திய அரசின் சக்தித் துறை, சக்தி பகிர்மான குழுமங்கள் செயல்பாடு மற்றும் நிதி குறித்த UDAY திட்டம் பற்றி, ஒரு அரசு அறிவிக்கையை (எண் 06.02.2015 – NEF/FRP) நவம்பர் 20, 2015 அன்று வெளியிட்டதை இங்கு நினைவு கூர்கிறோம்.
(அநிருத்த D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2341
|