ஏப்ரல் 17, 2017
இந்திய ரிசர்வ் வங்கி வங்கிக் குறை தீர்ப்பாளர் அலுவலகத்தை ராய்ப்பூரில் திறக்கிறது
வங்கிகள் முறையில் சமீபகாலத்தில் பெருகிவரும் இணைப்பினாலும், தற்சமயம் போபாலில் வங்கிக் குறைதீர்ப்பாளர் அலுவலகத்தின் ஆட்சிப் பரப்பெல்லை பரந்து விரிந்ததாக இருப்பதால், இந்திய ரிசர்வ் வங்கி சட்டிஸ்கர் மாநிலத்திற்காக ராய்ப்பூரில் வங்கிக் குறைதீர்ப்பாயத்தைத் திறந்துள்ளது.
இதுவரை போபால் வங்கிக் குறைதீர்ப்பாளர் அலுவலகத்தின் ஆட்சிப் பரப்பெல்லையின் கீழ் இருந்த சட்டிஸ்கர் மாநிலம் முழுவதும், தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ராய்ப்பூரிலுள்ள வங்கிக் குறைதீர்ப்பாளர் அலுவலகத்தின் ஆட்சி எல்லையின் கீழ் வந்துவிடும்.
(ஸ்வேதா மொஹைல்) உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2016-2017/2798
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்