ஏப்ரல் 01, 2017 முதல் பாரதீய மஹிளா வங்கியின் கிளைகள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் கிளைகளாகச் செயல்படும் |
மார்ச் 22, 2017
ஏப்ரல் 01, 2017 முதல் பாரதீய மஹிளா வங்கியின் கிளைகள்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் கிளைகளாகச் செயல்படும்
ஏப்ரல் 01, 2017 முதல் பாரதீய மஹிளா வங்கியின் கிளைகள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் கிளைகளாகச் செயல்படும். இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் (கணக்கு வைத்திருப்பவர்கள் உட்பட) ஏப்ரல் 01, 2017 முதல் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் வாடிக்கையாளர்களாகக் கருதப்படுவார்கள்.
பாரதீய மஹிளா வங்கி லிமிடெட்டை கையகப்படுத்தும் அரசாணை 2017-ஐ இந்திய அரசாங்கம் வெளியிட்ட்து. மார்ச் 20, 2017 தேதியிட்ட அரசாணை, அரசாணை இதழ் அசாதாரண பகுதி II பிரிவு 3 உப்பிரிவு (1)-ல் வெளியிட்ட கருத்தின்படி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சட்டம் 1955 (23 of 1955)-ன் சட்டப்பிரிவு 35 (2)-ன் ஷரத்துப்படி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பாரதீய மஹிளா வங்கி லிமிடெட்டைக் கையகப்படுத்தியதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2535
| |