ஏப்ரல் 26, 2017
“இந்தியாவின் காப்பகங்களின் 125-ஆவது விழா” வைச்
சிறப்பிக்கும் வகையில் ₹ 10 நாணயங்கள் வெளியீடு
இந்திய அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாணயங்களை இந்தியா ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடவுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வடிவம், பரிமாணம், உள்ளடக்கம் ஆகியவற்றைக் குறித்த விவரங்கள் இந்திய அரசாங்கத்தின் பிப்ரவரி 26, 2016 தேதியிட்ட அரசிதழ், பகுதி-II, பிரிவு 3, உட்பிரிவு (i) - G.S.R. 197 (E), புதுதில்லியிலுள்ள, நிதி அமைச்சகம், பொருளாதாரத் துறை கீழ்க் கண்டவாறு வெளியிட்டுள்ளது.
வடிவம்:
முன்புறம்:
நாணயத்தின் மத்தியில் அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் ‘सत्यमेव जयते’ என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் இடப்பக்கம் ‘भारत’ என்று தேவநாகரியிலும், வலப்பக்கம் ‘INDIA’ என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். சிங்கமுகத்தின் கீழ் பகுதியில் “₹“ என்ற ரூபாய் குறியீடும், மதிப்பிலக்கம் 10 என்பது சர்வதேச எண் அளவிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
பின்புறம்:
நாணயத்தின் மறுபக்கம் “தேசிய காப்பகங்களின் கட்டிட“-த்தின் உருவப்படம் மத்தியில் பொறிக்கப் பட்டிருக்கும். உருவப்படத்தின் கீழே “125“ என்று வருடமும் பொறிக்கப்பட்டிருக்கும். 125-ஆவது வருடக் கொண்டாட்டங்களின் லோகோவும் தேசிய காப்பகங்களின் கட்டிட உருவப்படத்திற்கு மேலே இருக்கும். மேற்புறம் “राष्ट्रीय अभिलेखागार“ என்று தேவநாகரியிலும் மற்றும் “NATIONAL ARCHIEVES OF INDIA” என்று கீழ்ப்புறத்தில் ஆங்கிலத்திலும் முறையே எழுதப்பட்டிருக்கும். மேலும், “1891” மற்றும் “2016” என்று நாணயத்தின் மேற்புறமும், கீழ்ப்புறமும் எழுதப்பட்டிருக்கும். உருவப்படத்தின் இடது மற்றும் வலதுபுறம் மேல்ப்பக்கத்தில் “1916” மற்றும் “2016” என்று ஆண்டு சர்வதேச எண்களில் பொறிக்கப்பட்டிருக்கும்.
2011-ஆம் வருடத்திய இந்திய நாணயச் சட்டத்தின்படி, இந்த நாணயங்கள் செல்லத்தக்கவை. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் இந்த மதிப்பிலக்க நாணயங்களும் செல்லத்தக்கவையே.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிகை வெளியீடு – 2016-2017/2908
|