ஜுன் 16, 2017
இந்திய ரிசர்வ் வங்கி, நவோதயா அர்பன் கோ-ஆபரோடிவ் வங்கி லிமிடெட், நாக்பூர்,
மஹாராஷ்டிராவுக்கு வழங்கப்பட்ட உத்தரவுகளை நீட்டிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, நவோதயா அர்பன் கோ-ஆபரோடிவ் வங்கி லிமிடெட், நாக்பூர், மஹாராஷ்டிராவுக்கு ஏற்கனவே வழங்கிய உத்தரவுகளை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கிறது. இந்த உத்தரவுகள் இப்பொழுது அக்டோபர் 15, 2017 வரை மறு ஆய்வுக்குட்பட்டு நீட்டிக்கப்படுகிறது. இந்த வங்கி முன்னரே மார்ச் 16, 2017 தேதியிலிருந்து ஜுன் 15, 2017 வரை கட்டுப்பாட்டு உத்தரவுகளின் கீழ் இருந்தது.
இந்த உத்தரவுகள் வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவுச் சங்களுக்கும் பொருந்தும்)-ன் சட்டப்பிரிவு எண் 35 A (1)-ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி அமலாக்கம் செய்யப்படுகிறது. விரும்பிய பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் மேற்குறிப்பிட்ட உத்தரவுகளின் பிரதி, வங்கியின் வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவுகள் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதக்கூடாது. இந்த வங்கியானது நிதிநிலை மேம்படும்வரை வங்கி வர்த்தகத்தைக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் தொடரலாம். சூழ்நிலைக்கேற்ப, இந்திய ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்களைக் கொண்டுவரக் கருதலாம்.
(அனிருத்தா D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிகை வெளியீடு – 2016-2017/3403 |