இந்திய ரிசர்வ் வங்கி, கோகுல் கூட்டுறவு அர்பன் வங்கி லிமிடெட் செகந்தராபாத்திற்கு, அளித்த வங்கி வர்த்தகம் மேற்கொள்ளும் உரிமத்தை ரத்து செய்துள்ளது |
ஜுன் 30, 2017
இந்திய ரிசர்வ் வங்கி, கோகுல் கூட்டுறவு அர்பன் வங்கி லிமிடெட்
செகந்தராபாத்திற்கு, அளித்த வங்கி வர்த்தகம் மேற்கொள்ளும் உரிமத்தை ரத்து செய்துள்ளது
பொதுமக்களுக்கு இதன்படி அறிவிக்கப்படுவது என்னவென்றால், ஜுன் 20, 2017 தேதியிட்ட உத்தரவின்படி இந்திய ரிசரவ் வங்கி, கோகுல் கூட்டுறவு அர்பன் வங்கி லிமிடெட், 7-2-148, மொன்டா மார்க்கெட், செகந்திராபாத் 500003-க்கு வங்கி வர்த்தகம் மேற்கொள்ள வழங்கிய உரிமத்தை, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 22-ன் கீழ் (சட்டப்பிரிவு 56-ஐச் சேர்த்துப்படிக்க) ரத்து செய்துள்ளது. வங்கியின் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) பிரிவு 5 (b) இல் வரையறுக்கப்பட்டபடி இனிமேல் "வங்கி" வர்த்தகத்தை (வைப்புகள் ஏற்றுக்கொள்வது, திருப்பித் தருவது உட்பட) மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு - 2016-2017/3547 |
|