ஜூலை 06, 2017
இந்திய ரிசர்வ் வங்கி, பிரம்மவார்ட் கமர்ஷியல் கூட்டுறவு வங்கி லிமிடெட்,
கான்பூர், உத்தரப்பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட உத்தவுகளை நவம்பர் 06, 2017
வரை நீட்டிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, பிரம்மவார்ட் கமர்ஷியல் கூட்டுறவு வங்கி லிமிடெட், கான்பூர், உத்தரப்பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட உத்தவுகளை மேலும் நான்கு மாதங்களுக்கு ஜூலை 07, 2017 முதல் நவம்பர் 06, 2017 வரை (மறு ஆய்வுக்குட்பட்டு) நீட்டிக்கிறது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 35 (A) -ன்கீழ் இந்த வங்கி, ஜுலை 07, 2015 முதல் கட்டுப்பாடு உத்தரவுகளின் கீழ் உள்ளது. மேற்குறிப்பிட்ட உத்தரவின் கால கெடு ஜுலை 06, 2017 வரை நீட்டிக்கப்பட்டது. ஜுன் 29, 2017 தேதியிட்ட உத்தரவின் மூலம் நவம்பர் 06, 2017 வரை இது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பார்வையிடும் வகையில், இந்த உத்தரவின் நகல் வங்கிக் கட்டிடத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவுகளில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் வெளியிடப்படுவதன் காரணமாக, இந்த வங்கியின் நிதிநிலை மேம்பட்டதாகவோ அல்லது நலிவுற்றதாகவோ கருதக்கூடாது. சூழ்நிலைக்கேற்ப ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்கள் செய்யக்கருதிடும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017–18/49 |