மஹாராஷ்டிரா மாநிலத்தில் வங்கிகள் தங்களின் கிராமப்புற மற்றும் பகுதியளவு நகர்ப்புற கிளைகளை ஞாயிறு (ஜூலை 30, 2017) அன்று திறந்து வைத்திருக்கவேண்டும் |
ஜூலை 28, 2017
மஹாராஷ்டிரா மாநிலத்தில் வங்கிகள் தங்களின் கிராமப்புற மற்றும்
பகுதியளவு நகர்ப்புற கிளைகளை ஞாயிறு (ஜூலை 30, 2017) அன்று
திறந்து வைத்திருக்கவேண்டும்
விவசாயிகளிடமிருந்து பயிரிக்காப்பீட்டு பிரீமியம் தொகையை வசூல் செயவதற்கு வசதியாக அனைத்து வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உட்பட தங்களின் கிராமப்புற மற்றும் பகுதியளவு நகர்ப்ப்புறக் கிளைகளை ஞாயிறு, ஜூலை 30, 2017 அன்று, திறந்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன. ஏதாவது கிளை திங்கள் கிழமையை வார விடுமுறை நாளாக அனுசரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தால், அவை, திங்கட்கிழமை ஜூலை 31, 2017 அன்று திறந்து வைத்திருக்கவேண்டும். ஏனெனில், பயிரிக்காப்பீட்டு பிரீமியம் செலுத்த அதுவே கடைசி நாளாகும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு - 2017-2018/283 | |