Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (131.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 18/03/2004
அமெரிக்க டாலர் 25000 இந்தியாவில் வாழும் தனிநபர்கள் தாராளமாக்கப்பட்ட பணம் செலுத்தும் திட்டம் முதலீட்டாளர் தற்காப்பு – வெளிப்படுத்த வேண்டிய தேவைகள்

 

 

                        மார்ச் 18,2004

 

அமெரிக்க டாலர் 25000 இந்தியாவில் வாழும் தனிநபர்கள் தாராளாமாக்கப்பட்ட பணம் செலுத்தும் திட்டம் முதலீட்டாளர் தற்காப்பு – வெளிப்படுத்த வேண்டிய தேவைகள்

                AP (DIR வரிசை) சுற்றறிக்கை எண்.64. பிப்ரவரி 4, 2ன்படி, இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் வாழும் தனிநபர்களுக்கு ஒரு நாள்காட்டி ஆண்டில் அமெரிக்க டாலர் 25000க்கு மிகாமல் வங்கியில் பணம் செலுத்துவதற்கு அனுமதி வழங்கி அத்திட்டத்தை நடைமுறைப் படுத்தியது.  இந்த வசதி இப்போது அமெரிக்க டாலர் 25000வரை ஒரு நாள்காட்டி ஆண்டில் நடப்பு அல்லது முதலீட்டுக் கணக்கு அல்லது இவ்விரண்டிலுமாகச் சேர்த்து பணம் செலுத்தலாம் என அமைகிறது.

                இந்தியாவிலுள்ள சில வெளிநாட்டு வங்கிகளும் இந்திய வங்கிகளும் இதைத்தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் வைப்புத் தொகைகளை இந்தியாவில் வாழ்வோரிடமிருந்து பெற்றுள்ளன. இது தொடர்பாக, பல விளம்பரங்கள் வெளிநாட்டு பண வைப்புகள் அல்லது நிதிகளை குறிப்பிட்ட வட்டி வீதத்தில் கடல்கடந்த மையங்களில் தொடங்கும்படி கேட்டுள்ளன என்பது தெரியவந்தது அந்த விளம்பரங்களில் ஏற்புடைய வெளிப்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து வைப்புகளைச் செலுத்தக் கூடியவர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கு வழிகாட்டும் விதமாகத் தெரிவிக்கப்படவில்லை. வெளிநாட்டு நிறுவன அமைப்புகளிடமிருந்து வேற்றுநாட்டு நாணய வைப்புகளை வரவேற்கும் திட்டம் இந்தியாவில் சந்தைப் படுத்தப்படும் சூழ்நிலையில் அவ்வெளிநாட்டு நிறுவன அமைப்புகள் இந்தியாவில் செயற்பாடற்றவை எனவே இந்நடவடிக் கைகளை மேற்பார்வையிடவேண்டிய பிரச்சனைகள் எழும்.

                எனவே பொது நலனைக் கருத்திற் கொண்டு உரிமம் பெற்ற வங்கித்தொழில்புரியும் குழுமம் தவிர ஏனைய அமைபுகள் இந்தியாவில் வாழ்வோரிடமிருந்து வைப்புகளைப் பெறலாகாது என முடிவெடுக்கப்பட்டது.  மேலும் இந்திய மற்றும் வெளி நாட்டு வங்கிகள் இந்தியாவில் செயற் பாடற்றவையாக இருப்பினும் அவை இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற்றே இத்திட்டத்தைச் சந்தைப்படுத்தி வெளிநாட்டு நாணய வைப்புகளை அவர்களது வெளிநாட்டுக் கிளைகளில் செலுத்தி கடல்கடந்த பறிமாற்ற நிதி முகவர்களாகச் செயல்படலாம் அல்லது வேறு வெளிநாட்டு நிதிச் சேவை குழுமங்களுக்காகவும் செயல்படலாம்.  அத்தகைய ஒப்புதலைப் பெறுவதற்கு வங்கிகள் கீழ்கண்ட தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கிக்குக் கொடுக்கவேண்டும்.

Ø       வங்கியின் பெயர், அதன் தலைமை அலுவலக விபரம் (உள்நாட்டு அலுவலகங்கள் இருப்பின் அதன் விபரம்) அதன் முழு முகவரி

Ø       முதன்மை வங்கியின் மேற்பார்வை ஆணையுரிமைக்குப் பொறுப்பேற்று வங்கியின் தலைமை அலுவலகத்தின் மேற்பார்வைக்குப் பொறுப்பேற்பவர்

Ø

Ø       Moody’s  அல்லது  Standard and Poor போன்ற தரவரிசை மதிப்பீடு செய்யும் பன்னாட்டளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரமதிப்பீடு முகமையின் நீண்டகால தர வரிசையின் நிலைப்பாடு

Ø

Ø       சந்தைப் படுத்தப்பட்ட திட்டத்தின் முழுமையான விபரங்கள்

 

இது கொடர்பாக விண்ணப்பங்கள், தலைமை மேலாளர்-பொறுப்பு, வங்கிச் செயல் இயக்கம் மற்றும் மேம்பாட்டுத்துறை, இந்திய ரிசர்வ் வங்கி,. மத்திய அலுவலகம், மையம் 1, உலக வணிக மையம் கபே பரேடு மும்பய் 400005 எனும் முகவரிக்கு அனுப்படவேண்டும்.

 

                மேற்சொன்ன கட்டுதிட்டங்கள் குடியிருப்போர் தனிநபரது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தாது.  அவர் இத்திட்டத்தின் கீழ் முதலீட்டுக் கணக்கு சார்ந்த நடவடிக்கைகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்.

                வங்கித் தொழில் சார்ந்த அமைப்புகள் குறைந்த அளவிலேயே இன்றிமையா அம்சங்களை வெளியிடுதிறார்கள்.  அதனடிப்படையில் வெளிநாட்டுப் பண வைப்புகளை பொதுமக்களிடமிருந்து பெற முயற்சி செய்கிறார்கள். எனவே குடியிருப்போர் அயல்நாட்டு மையங்களில் வெளிநாட்டு நாணய வைப்புகளைச் செலுத்துவதற்கு முன்னதாக அவர்களாகவே தாராள ஊக்கத்தோடு அவர்களது முதலீட்டின் இடர்களைச் சரியாகப்புரிந்து செயல்படவேண்டும் எனப் பத்திரிகை வெளியீடு அறிவிக்கும் நோக்கமே வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை உறுதிசெய்வதே.

 

அஜித் பிரசாத்

மேலாளர்

பத்திரிகை  வெளியீடு 2003-2004/1098

 

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்