செப்டம்பர் 13, 2017
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும்
பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் –
சன்மித்ரா சஹகாரி வங்கி மரியாதித், மும்பாய், மஹாராஷ்டிரா
இந்திய ரிசர்வ் வங்கி, சன்மித்ரா சஹகாரி வங்கி மரியாதித், மும்பாய், மஹாராஷ்டிரா வங்கிக்கு, ஜுன் 14, 2016 தேதியில் அளித்த உத்தரவின் கீழ், ஜுன் 14, 2016 தேதியிட்ட உத்தரவின்படி, ஜுன் 14, 2016 வேலை நேர முடிவிலிருந்து 6 மாதங்களுக்கு இவ்வங்கி கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டது.இந்த கட்டுப்பாடுகள் டிசம்பர் 07, 2016 மற்றும் ஜுன் 08, 2017 ஆகிய தேதியிட்ட உத்தரவுகள் மூலம் முறையே 6 மாதங்களுக்கும், 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டன. ஜுன் 14, 2016 தேதியிட்ட வழிகாட்டுதல் உத்தரவின் காலம் (டிசம்பர் 07, 2016 தேதியிட்ட மற்றும் ஜுன் 08, 2017 தேதியிட்ட உத்தரவுகளுடன் சேர்த்துப் படிக்க) செப்படம்பர் 15, 2017 முதல் மார்ச் 14, 2018 வரை மேலும் 6 மாதங்களுக்கு செப்படம்பர் 08, 2017 தேதியிட்ட உத்தரவின் மூலம் மறுஆய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கப்படுவதாக பொதுமக்களின் தகவலுக்காக இதனை அறிவித்துள்ளது.
அவ்வப்போது திருத்தப்பட்ட உத்தரவுகளின் கீழ் உள்ள மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் இருக்கும்.
பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் செப்டம்பர் 08, 2017 வெளியிடப்பட்ட உத்தரவுகளின் பிரதி, வங்கி வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படும்.
இவ்வாறு, இந்திய ரிசர்வ் வங்கி மாற்றங்கள் அறிவித்ததை மட்டுமே கருத்தில்கொண்டு, வங்கியின் நிதிநிலை கணிசமான அளவு மேம்பாட்டதாக ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துவிட்டதாகக் கருதக்கூடாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிகை வெளியீடு – 2017-2018/722 |