Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (267.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 25/09/2017
நிதிக் கல்விக்கான தேசிய மையத்தின் (National Centre for Financial Education-NCFE) தேசிய நிதி அறிவு மதிப்பீட்டுத் தேர்வு (National Financial Literacy Assessment Test-NFLAT) – 2017-18

செப்டம்பர் 25, 2017

நிதிக் கல்விக்கான தேசிய மையத்தின் (National Centre for Financial Education-NCFE)
தேசிய நிதி அறிவு மதிப்பீட்டுத் தேர்வு (National Financial Literacy Assessment
Test-NFLAT) – 2017-18

6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் நிதிக் கல்விக்கான தேசிய மையத்தின் (National Centre for Financial Education-NCFE) தேசிய நிதி அறிவு மதிப்பீட்டுத் தேர்வு (National Financial Literacy Assessment Test-NFLAT) – 2017-18-க்கு நிதிக் கல்விக்கான தேசிய மையம் அழைப்பு விடுத்துள்ளது.

நிதியியல் கல்விக்கான தேசிய நலனை அமுல்படுத்துவதற்காக அனைத்து நிதித்துறை ஒழுங்குமுறை நிறுவனங்களுடனும், அதாவது இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவரித்தனை வாரியம், காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் தேசிய பத்திர சந்தை நிறுவனமும் இணைந்துள்ளது.

நிதிக் கல்விக்கான தேசிய மையத்தின் (NCFE) தேசிய நிதி
அறிவு மதிப்பீட்டுத் தேர்வு (NFLAT)–2017-18-ஐப் பற்றி

NFLAT ஜூனியர் (வகுப்பு 6 முதல் 8 வரை), NFLAT (வகுப்பு 9 மற்றும் 10) மற்றும் NFLAT சீனியர் (வகுப்பு 11 மற்றும் 12) ஆகிய பிரிவுகளில் இந்த தேர்வு நடத்தப்படும். போதுமான தகவல் தொழில்நுட்ப வசதி கொண்ட பள்ளிகள் தங்கள் வளாகத்தில் இந்தத் தேர்வை நடத்தலாம். இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.

3 பிரிவுகளுக்குமான பதிவுகளும் திறந்திருக்கும். பள்ளிகள் ஆன்லைனில் தங்கள் பதிவுகளைப் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றன. பள்ளி பதிவுக்குப் பின்னர், மாணவர்களின் பதிவுகளை அந்தந்த பள்ளிகள் மையத்திற்கு அனுப்பவேண்டும். ஒவ்வொரு பள்ளியும் தங்களது சொந்த மாணவர்களுக்கான தேர்வினை நிர்வகித்து நடத்த வேண்டும் மற்றும் தேர்வுக்கு தேவையான உதவி தேவைப்பட்டால் நிதிக் கல்விக்கான தேசிய மையத்தின் குழுவினரால் அது வழங்கப்படும். தேர்வு இலவசம்.

பள்ளிகள் http://www.ncfeindia.org/nflat என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

முக்கியமான தேதிகள்

விபரங்கள் ஆன்லைன் தேர்வுக்கான தேதிகள் ஆஃப் லைன் தேர்வுக்கான தேதிகள்
பதிவு திறக்கப்படும் நாள் டிசம்பர் 30, 2017 வரை அக்டோபர் 01, 2017 முதல் நவம்பர் 10, 2017 வரை
தேர்வு டிசம்பர் 31, 2017 வரை ஏதேனும் ஒரு நாள் டிசம்பர் 12, 2017 (ஒரு நாள்)
பிராந்திய மற்றும் தேசிய போட்டி ஏப்ரல் 1 முதல் 30, 2018-க்கு இடையே

பரிசுகள்

தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு ஒரு சான்றிதழ் கிடைக்கும். இது தவிர மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் ரொக்கப் பரிசுகள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் / கின்டல்ஸ், பதக்கங்கள் போன்ற பல மனங்கவரும் பரிசுகள் உள்ளன.

அனைத்து பள்ளிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திட ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மேலும் தகவல்களைப் பெற –
தேசிய பத்திர சந்தை நிறுவனம், NISM பவன், பிளாட் எண் 82, செக்டார்-17, வாஷி, நவி மும்பை 400 703.

தொலைபேசி 022-66734600-02 மின்னஞ்சல் nflat@nism.ac.in இணையதள முகவரி www.ncfeindia.org

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/820

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்