அக்டோபர் 10, 2017
தி நீட்ஸ் ஆஃப் லைஃப் கூட்டுறவு வங்கி லிட்., மும்பை
மீது இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, தி நீட்ஸ் ஆஃப் லைஃப் கூட்டுறவு வங்கி லிட்., மும்பை மீது ரூ. 5.00 லட்சம் அபராதம் விதிக்கிறது. இதனைப் பின்வரும் காரணத்திற்காக விதிக்கிறது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும், சட்டப்பிரிவு எண் 47A (1) (b) மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி –
-
இயக்குனர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு கடன்களை தருவதற்கான தடை
-
அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு, பிணையம் ஏதுமில்லாத ஓவர் டிராஃப்ட் வசதிகளை வழங்குவது
-
தனிப்பட்ட பங்குதாரரின் உச்ச வரம்பான மூலதனத்தில் 5%ஐ மீறி வங்கி நன்கொடை அளித்தல்
-
ரியல் எஸ்டேட், வணிக ரீதியான ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டுக் கடன்கள் ஆகியவற்றிற்கு பரிந்துரைக்கப்படும் வெளிப்பாடு வரம்புகளை மீறல்
-
பாதுகாப்பற்ற வெளிப்பாடு வரம்பு 10 சதவிகிதத்தை மீறல்
-
பாதுகாப்பற்ற தனிநபர் வெளிப்பாடு வரம்பு ரூ.2.00 லட்சத்தை மீறல்
-
வைப்புதாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு நிதிக்கு பங்களிக்க தவறுதல்
ஆகியவை குறித்த ஆணைகள் / வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை மேற்குறிப்பிட்ட வங்கி பின்பற்றாத காரணத்தால் மேற்படி அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் கோரி அறிவிப்பினை அனுப்பியது. அதற்கு வங்கி, எழுத்துப் பூர்வமான பதிலை அளித்தது. வங்கி, செப்டம்பர் 04,2017 அன்று தனிப்பட்ட விசாரணையில் கலந்துகொள்ளத் தவறிவிட்டது. இது குறித்த உண்மைகளையும், வங்கியின் பதிலையும் கருத்தில் கொண்டதில், வங்கியின் அத்துமீறல்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால், அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/981 |