இந்திய ரிசர்வ் வங்கி, 2 வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது |
ஆகஸ்ட் 24, 2017
இந்திய ரிசர்வ் வங்கி, 2 வங்கிசாரா நிதி நிறுவனங்களின்
பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA(6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
சான்றிதழ் வழங்கிய தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. S.R.F. ஹையர் பர்ச்சேஸ் பிரைவேட் லிமிடெட் |
197, மாஸ்டர் தாரா சிங் நகர் ஜலந்தர் (பஞ்சாப்) |
B-06.00257 |
ஏப்ரல் 03, 2000 |
ஜுன் 15, 2017 |
2. |
M/s. மிட்டர் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் |
4-வது தளம், கிஸ்மத் காம்ப்ளக்ஸ், மில்லர்கன்ஞ் விஸ்வகர்மா செளக் லூதியானா-141003 (பஞ்சாப்) |
06.00201 |
ஜூலை 30, 1999 |
ஜூலை 10, 2017 |
பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்ததைத் தொடர்ந்து, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-18/538 |
|