Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (266.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 04/09/2017
முனைவர் அமர்த்தியா லாஹிரி அவர்கள், மேம்பட்ட நிதி ஆராய்ச்சி மற்றும் கற்றல் மையத்தின் (Centre for Advanced Financial Research and Learning - CAFRAL) இயக்குநராகப் பொறுப்பேற்கிறார்

செப்டம்பர் 04, 2017

முனைவர் அமர்த்தியா லாஹிரி அவர்கள், மேம்பட்ட நிதி ஆராய்ச்சி மற்றும்
கற்றல் மையத்தின் (Centre for Advanced Financial Research
and Learning - CAFRAL) இயக்குநராகப் பொறுப்பேற்கிறார்

முனைவர் அமர்த்தியா லாஹிரி அவர்கள், மேம்பட்ட நிதி ஆராய்ச்சி மற்றும் கற்றல் மையத்தின் (Centre for Advanced Financial Research and Learning - CAFRAL) இயக்குநராக செப்டம்பர் 01, 2017 முதல் பொறுப்பேற்கிறார். முன்னதாக அவர் ராயல் பேங்க் (Faculty) ஆராய்ச்சிப் பேராசிரியராகவும், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் “வான்கூவர் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்” பள்ளியில் முதுநிலைப் பட்டதாரிகளின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். முனைவர் லாஹிரி அவர்கள் ஆசிய ஆராய்ச்சி நிறுவனத்தில், இந்திய ஆராய்ச்சியின் ஜொஹல் தலைவர் பதவியையும் பெற்றார். பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பொறுப்பேற்பதற்கு முன்னர், நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கி, கலிபோர்னியாவின் பல்கலைக் கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிலைகளில் அவர் பொறுப்பிலிருந்தார்.

முனைவர் அமர்த்தியாவின் சிறப்புத் துறைகள், சர்வதேச பொருளாதாரம் மற்றும் பேரியல் பொருளாதாரம் ஆகியவையாகும். அவர் நாணய மாற்று மேலாண்மை, பணவியல் கொள்கைகள், பணம் செலுத்துதல் சமநிலை நெருக்கடி மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அவரது சமீபத்திய ஆராய்ச்சி, பணவியல் பொருளாதாரம் மற்றும் பாலின இடைவெளிகள், சாதிகளிடையே சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர் புலம்பெயர்தல் போன்றவை பற்றியதாகும்.

அரசியல் பொருளாதார நாளேடு, பொருளாதாரத் தத்துவ நாளேடு, சர்வதேச பொருளாதார நாளேடு, பணப் பொருளாதார நாளேடு, ஐரோப்பிய பொருளாதார விமர்சனம் மற்றும் உலக வங்கி, புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் மற்றும் தேசிய அப்ளைடு பொருளாதார கவுன்சில் ஆகியவற்றின் கொள்கை சார்ந்த முதன்மையான பொருளாதார பத்திரிகைகளில் டாக்டர் அமர்த்தியாவின் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

முனைவர் அமர்த்தியா "ஆசிரிய தொழில் மேம்பாட்டு விருது" மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சி மற்றும் போதனை பங்களிப்புகளுக்காக "புகழ்பெற்ற சிறப்பு கல்வி கற்பித்தல் விருது" போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். முனைவர் அமர்த்தியா, அமெரிக்க பொருளாதார சங்கம் மற்றும் எகனாமிக்ரிக் சொசைட்டி உறுப்பினர் ஆவார். அவர் ஐரோப்பிய பொருளாதார ஆய்வு மற்றும் சர்வதேச பொருளாதார இதழின் இணை ஆசிரியர் ஆவார்.

முனைவர் அமர்த்தியா லாஹிரி அவர்கள், பொருளாதாரத்தில் பிஎச்.டி-ஐ மேரிலாந்த் பல்கலைக்கழகத்தில் முடித்தார். தில்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இருந்து பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

(ஜோஸ் J. காட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/626

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்