Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (251.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 22/11/2017
இந்திய ரிசர்வ் வங்கி, ருபீ கூட்டுறவு வங்கி லிமிடெட், புனே வங்கிக்கு அளிக்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவுகளை நீட்டிக்கிறது

நவம்பர் 22, 2017

இந்திய ரிசர்வ் வங்கி, ருபீ கூட்டுறவு வங்கி லிமிடெட், புனே வங்கிக்கு
அளிக்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவுகளை நீட்டிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி, ருபீ கூட்டுறவு வங்கி, புனே வங்கிக்கு (நவம்பர் 17, 2017 தேதியிட்ட DCBR.CO.AID/D-21/12.22.218/2017-18 சுற்றறிக்கையின்படி), நவம்பர் 22, 2017 முதல் மே 31, 2018 வரை மறுஆய்வுக்கு உட்பட்டு, வழிகாட்டுதல் உத்தரவுகளை நீட்டித்துள்ளது. இந்த வழிகாட்டுதல் உத்தரவுகள், முதன் முதலாக பிப்ரவரி 22, 2013 முதல் ஆகஸ்டு 21, 2013 வரை வெளியிடப்பட்டு, பின்னர் எட்டு முறை, ஆறு ஆறு மாதங்களாக நீட்டிக்கப்பட்டு, அதன்பின்னர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாக மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக, ஆகஸ்டு 22, 2017 முதல் நவம்பர் 21, 2017 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A உப பிரிவு 1-ன் (உடன் பிரிவு 56-ஐயும் படிக்கவும்) கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்தக் கட்டுப்பாடுகளை விதித்தது. பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் உத்தரவுகளின் பிரதி, வங்கியின் வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படும்.

இந்த வழிகாட்டுதல் உத்தரவு வெளியிடப்பட்டதன் காரணமாக, மேற்படி வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துவிட்டதாகக் கருதக் கூடாது. அதன் நிதி நிலை முன்னேற்றமடையும் வரை கட்டுப்பாடுகளுக்குட்பட்டு, வங்கி தனது வர்த்தகத்தைத் தொடர்ந்திடும். சூழ்நிலைகளைப் பொறுத்து, இந்திய ரிசர்வ் வங்கி இந்த வழிகாட்டுதல்களை மாற்றியமைக்கலாம்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிகை வெளியீடு – 2017-2018/1410

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்