டிசம்பர் 14, 2017
இந்திய ரிசர்வ் வங்கி, M/s. ராதாகிருஷ்ணா ஃபைனான்ஸ்
பிரைவேட் லிமிடெட் மீது பண அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, M/s. ராதாகிருஷ்ணா ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் மீது, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1934-ன் சட்டப் பிரிவு எண் 58G உப பிரிவு (1)-ன் உட்பிரிவு (b) (உடன் இணைந்த பிரிவு 58B உப பிரிவு (5)-உட்பிரிவு (aa))-ன்படி, அவ்வப்போது ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவுகளுக்கு எதிராகச் செயல்பட்டதால், இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ரூ. 1.00 லட்சம் பண அபராதத்தை விதிக்கிறது.
பின்புலம்
இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் கீழ், நிறுவனத்தின் மார்ச் 31, 2016 வரையிலான நிதி நிலைப்பாட்டை பிப்ரவரி 16, 2017 அன்று ஆய்வு செய்தது. இந்த ஆய்வின்போது, துணைக் கடன்களை மீட்பதற்கான வழிகாட்டுதல்களை மீறியதாகக் கண்டறியப்பட்டது. ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல், துணைக் கடன்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது, ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட முதன்மைச் சுற்றறிக்கை எண் DNBR (PD) CC No. 044/03.10.119/2015-16, ஜூலை 01, 2015 தேதியிட்டதும் மற்றும் ஏற்றுக் கொள்வதற்கான வழிகாட்டுதல்களைக் கொண்டு முதன்மை வழிகாட்டுதல்களின் அத்தியாயம் II-ன் பாரா 3-ல் உள்ள (xvii) பிரிவில் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை மீறியுள்ளது கண்டறியப்பட்டது. நிறுவனத்திற்கு ஒரு காரணம் காட்டும் அறிவிப்பு (Show Cause Notice - SCN), அபராதம் விதிப்பதற்காக ஜுன் 7, 2017 அன்று வெளியிடப்பட்டது. அந்நிறுவனத்தின், மேற்குறிப்பிடப்பட்ட SCN-க்கான பதில் சரியாக பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அது திருப்திகரமாக இல்லை. மேலும், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 பிரிவு 58G-ன் உப பிரிவு 2-ன் கீழ் ரிசர்வ் வங்கியானது நிறுவனத்தின் தனிப்பட்ட விசாரணையைத் துவங்கியது. வழக்கு விசாரணையின் முழு உண்மைகளையும், நிறுவனத்தின் பதில்களையும் பரிசீலித்தபின், தனிப்பட்ட விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட்ட படிவங்கள், விதிமீறல் நிருபணமானது என்ற முடிவுக்கு வந்தது. இது நிறுவனத்தின் மீதான அபராதத் தொகையை வசூலிப்பதற்கும் உத்தரவாதம் செய்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் மீது ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/1633
|