ஜனவரி 04, 2018
3 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. அல்கெமிஸ்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட்
(முன்பு M/s. மகிந்த்ரா ஃபின்லீஸ் பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) |
405, ஜியோதி ஷிகார் டவர், ஜனக்பூரி மாவட்ட வளாகம் புது தில்லி 110058 |
B-14.01844 |
மே 02, 2006 |
அக்டோபர் 27, 2017 |
2. |
M/s. ஸுக்-செயின் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் |
பில்டிங் எண் 284, முதல் தளம் சனாதன் தர்ம மந்திர் ஹாஸ்பிடல் ரோடு லஸ்கர், க்வாலியர் |
A-06.00486 |
அக்டோபர் 08, 2007 |
டிசம்பர் 19, 2017 |
3. |
M/s. ரிஷப் ஃபைனான்ஸியல் சர்வீஸஸ் லிமிடெட் |
459, மின்ட் வீதி சௌகார்பேட்டை சென்னை 600079 |
B-07.00361 |
செப்டம்பர் 19, 2008 |
டிசம்பர் 19, 2017 |
சான்றிதழ்களை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/1839
|