ஜனவரி 22, 2018
இந்திய ரிசர்வ் வங்கி, M/s. ராம்கி ஃபைனான்ஸ் மற்றும்
இன்வெஸ்ட்மென்ட் (பி.) லிமிடெட் மீது அபராதம் விதிக்கிறது
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1934-ன் சட்டப் பிரிவு எண் 58G உப பிரிவு (1)-ன் உட்பிரிவு (b) (உடன் இணைந்த பிரிவு 58B உப பிரிவு (5)-உட்பிரிவு (aa) சேர்த்துப் படிக்கவும்)-ன்படி, M/s. ராம்கி ஃபைனான்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் (பி.) லிமிடெட் மீது, அவ்வப்போது ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவுகளுக்கு எதிராகச் செயல்பட்டதால், இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ரூ. 1.00 லட்சம் பண அபராதத்தை விதிக்கிறது.
பின்புலம்
இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெறாமல் மார்ச் 31, 2016 ஆம் ஆண்டு M/s. ராம்கி ஃபைனான்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் (பி.) லிமிடெட் எனும் அதன் பெயரை M/s. ராம்கி IWM பிரைவேட் லிமிடெட் என மாற்றி, இந்திய ரிசர்வ் வங்கியின் ஜனவரி 13, 2000-ஆம் ஆண்டின் சுற்றறிக்கையின் பத்தி 5-ன் ஷரத்தை மீறியுள்ளது. நிறுவனத்திற்கு ஒரு காரணம் காட்டும் அறிவிப்பு (Show Cause Notice - SCN), அபராதம் விதிப்பதற்காக ஜனவரி 20, 2017 அன்று வெளியிடப்பட்டது. அந்நிறுவனத்தின், மேற்குறிப்பிடப்பட்ட SCN-க்கான பதில் சரியாக பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அது திருப்திகரமாக இருப்பதாகத் தெரியவில்லை. ஆகஸ்டு 16, 2017-ல், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 பிரிவு 58G-ன் உப பிரிவு 2-ன் கீழ் ரிசர்வ் வங்கியானது நிறுவனத்தின் தனிப்பட்ட விசாரணையைத் துவங்கியது. வழக்கு விசாரணையின் முழு உண்மைகளையும், நிறுவனத்தின் பதில்களையும் பரிசீலித்தபின், தனிப்பட்ட விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட்ட படிவங்கள், விதிமீறல் நிருபணமானது என்ற முடிவுக்கு வந்தது. இது நிறுவனத்தின் மீதான அபராதத் தொகையை வசூலிப்பதற்கும் உத்தரவாதம் செய்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் மீது ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2002 |