பிப்ரவரி 20, 2018
இந்திய ரிசர்வ் வங்கி, பெட்கிஹல் அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட்,
பெட்கிஹல், கர்நாடகா மீது அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, பெட்கிஹல் அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், பெட்கிஹல், கர்நாடகா மீது ரூ.1,00,000 (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) பண அபராதத்தை விதிக்கிறது. வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (b) மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின்படி ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவு / வழிகாட்டுதல்களின் வெளிப்பாடு நெறிமுறைகள் குறித்த வழிமுறைகளை மேற்படி வங்கி பின்பற்றாத காரணத்தால் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் கோரி அறிவிப்பினை அனுப்பியது. அதற்கு வங்கி, தனிப்பட்ட முறையில் நேரில் ஆஜராகி பதிலை அளித்தது. இது குறித்த உண்மைகளையும், வங்கியின் தனிப்பட்ட பதிலையும் கருத்தில் கொண்டதில், வங்கியின் அத்துமீறல்கள் நிரூபிக்கப்பட்டு, அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு - 2017-2018/2239
|