வங்கிசாரா நிதிநிறுவனத்தின் பதிவுச் சான்றிதழை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது |
மார்ச் 23, 2018
வங்கிசாரா நிதிநிறுவனத்தின் பதிவுச் சான்றிதழை
இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனத்திற்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தனது வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. லாஃப்டி செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட்
(தற்பொழுது M/s. லாஃப்டி செக்யூரிட்டீஸ் லிமிடெட்) |
8, லையான்ஸ் ரேன்ஜ் முதல் தளம் அறை எண் 11 மித்ரா பில்டிங் கொல்கத்தா 700001 |
B-05.04764 |
ஜனவரி 20, 2003 |
ஜனவரி 31, 2018 |
எனவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள கம்பெனி, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2538
| |