ஜியோ பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் செயல்படத் தொடங்கியது |
ஏப்ரல் 03, 2018
ஜியோ பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட்
செயல்படத் தொடங்கியது
பிப்ரவரி 03, 2018 முதல் ஜியோ பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் வங்கி தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. இதன் பொருட்டு, பேமென்ட்ஸ் வங்கியாக இந்தியாவில் செயல்படுவதற்குரிய உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு எண் 22 (1)-ன் கீழ் இதற்கு அளித்துள்ளது.
ஆகஸ்டு 19, 2015 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி, பேமென்ட்ஸ் வங்கி அமைப்பதற்குக் கொள்கை அடிப்படையிலான அனுமதி வழங்கப்பட்ட 11 விண்ணப்பதாரர்களில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மும்பையும் ஒன்றாகும்.
(ஜோஸ் J. காட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு –2017-2018/2617
| |