ஏப்ரல் 09, 2018
5 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. த்ருப்தி ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
306, சர்திக் காம்ப்ளக்ஸ் ஃபன் ரிபப்ளிக் சாடிலைட் அகமதாபாத் 380015 குஜராத் |
01.00080 |
மார்ச் 09, 1998 |
மார்ச் 16, 2018 |
2. |
M/s. லிஸா டை-அப் பிரைவேட் லிமிடெட் (தற்பொழுது M/s. டோர்ஸா ஃபின்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட் என அறியப்படுகிறது) |
56, மெட்காஃப் வீதி
2வது தளம் அறை எண் 2F கொல்கத்தா 700012 |
B-05.03612 |
ஏப்ரல் 10, 2003 |
மார்ச் 16, 2018 |
3. |
M/s. மோகா ஃபைனான்ஸ் லிமிடெட் |
முதல் தளம், WG-329 பஸ்தி அட்டா சௌக் ஜலந்தர் 144001 பஞ்சாப் |
06.00200 |
ஜுன் 06, 2007 |
மார்ச் 16, 2018 |
4. |
M/s. குஜராத் ஃபைனான்ஸியல் & கேபிடல் லிமிடெட் (தற்பொழுது M/s. குஜராத் ஃபைனான்ஸியல் & கேபிடல் பிரைவேட் லிமிடெட் என அறியப்படுகிறது) |
604, சகர் III, வருமான வரி சர்க்கிள் அகமதாபாத் 380014 குஜராத் |
01.0231 |
மே 04, 1998 |
மார்ச் 16, 2018 |
5. |
M/s. சிங் ஃபைனான்ஸ் லிமிடெட் |
54-D, நேரு மார்க்கெட் ஜம்மு 180012 |
A-1100042 |
ஜுன் 10, 2008 |
பிப்ரவரி 27, 2018 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2673
|