ஏப்ரல் 13, 2018
HCBL கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், லக்னோ, உத்தரப் பிரதேசம் - வங்கிக்குப் பிறப்பித்த வழிகாட்டுதல் உத்தரவுகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி, HCBL கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், லக்னோ, உத்தரப் பிரதேசத்திற்கு ஏப்ரல் 10, 2015 தேதியிட்ட ஆணையின்படி அவ்வப்போது மாற்றங்கள் செய்து பிறப்பித்த அனைத்தையும் உள்ளடக்கிய வழிகாட்டுதல் உத்தரவுகளை ஏப்ரல் 15, 2018 வரை பிறப்பித்தது.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது) 1949ன் பிரிவு 35 A-யின் உப பிரிவு (2)-ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியிடம் கொடுக்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், HCBL கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், லக்னோ, வங்கிக்குக் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவுகளை, பொதுமக்களின் திருப்திகரமான விருப்பத்திற்கிணங்க அவ்வபோது மாற்றங்கள் செய்து ஏப்ரல் 13, 2018 முதல் திரும்பப் பெறப்படுகின்றன.
பொதுமக்களில், விருப்பமுள்ளவர்கள் பார்ப்பதற்கு வசதியாக, வங்கியின் வளாகத்தில், ஆணையின் நகல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வங்கி, இதன்பிறகு தனது வங்கி வர்த்தகத்தை வழக்கம்போல் தொடர்ந்திடும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2735
|