ஏப்ரல் 17, 2018
இந்திய ரிசர்வ் வங்கி ,பணப் பற்றாக்குறை இல்லையென்பதை தெளிவுபடுத்துகிறது
நாட்டின் சில பகுதிகளில் பணப் பற்றாக்குறை இருப்பதாக செய்தி ஊடகத்தின் ஒரு பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்திலேயே ரிசர்வ் வங்கியின் வால்ட்டுகளிலும், பணப் பெட்டகங்களிலும் போதுமான அளவு பணம் இருப்பதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நோட்டுகள் அச்சிடுதலை நான்கு, நோட்டுகள் அச்சகங்களிலும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
பற்றாக்குறை நிலவுவது என்பது பெரும்பாலும் ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்கான போக்குவரத்து சிக்கல்கள் காரணமாகவும், மற்றும் ஏடிஎம்களில் இன்னும் மறுமதிப்பீடுகளும் நடைபெறுவதாலுமாகும். இந்த அம்சங்களை இந்திய ரிசர்வ் வங்கி நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது.
மேலும், அதிகப்படியான முன்னெச்சரிக்கையாக இந்திய ரிசர்வ் வங்கி அதிக பணம் எடுக்கப்படும் இடங்களுக்கு பணத்தை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றது.
(ஜோஸ் J. காட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு –2017-2018/2758
|