மே 09, 2018 வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும்
பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் –
கரத் ஜனதா சஹகாரி வங்கி லிமிடெட், கரத், மஹாராஷ்டிரா –
கால நீட்டிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி, கரத் ஜனதா சஹகாரி வங்கி லிமிடெட், கரத், மஹாராஷ்டிரா வங்கிக்கு, நவம்பர் 09, 2017 தேதியில் வங்கியின் வர்த்தகத்தை முடித்த நாளில் அளிக்கப்பட்ட, நவம்பர் 07, 2017 தேதியிட்ட உத்தரவின்படி 6 மாதங்களுக்கு வழிகாட்டுதல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, மேற்குறிப்பிட்ட வங்கிக்கு பொதுமக்கள் நலன் கருதி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ன் பிரிவு 56 உடன் பிரிவு 35A இன் உப பிரிவு (1) இன் கீழ் (பிரிவு 56ஐயும் உடன் சேர்த்துப் படிக்க) வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நவம்பர் 07, 2017 தேதியிட்ட கட்டுப்பாட்டு உத்தரவின்படி வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை, இவ்வங்கிக்கு மேலும் ஆறு மாதங்களுக்கு மே 10, 2018 முதல் நவம்பர் 09, 2018 வரை ஆறு மாத காலத்திற்கு மே 03, 2018 தேதியிட்ட உத்தரவின்படி மறுஆய்விற்கு உட்பட்டு நீட்டித்து வங்கியை கட்டுப்பாட்டின்கீழ் வைக்கிறது.
மே 03, 2018 தேதியிடப்பட்ட உத்தரவின் நகல் பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவுகளில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் வெளியிடப்படுவதன் காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி, இந்த வங்கியின் நிதிநிலைமையில் தேவையான முன்னேற்றம் அடைந்துள்ளது என திருப்தியடைந்துவிட்டதாகக் கருதக்கூடாது.
(அனிருத்த D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2949 |