மே 16, 2018 வசந்த்தாதா நகரி சஹகாரி வங்கி லிமிடெட், ஓஸ்மானாபாத்
மஹாராஷ்டிராவிற்கு வழிகாட்டுதல் உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி, வசந்த்தாதா நகரி சஹகாரி வங்கி லிமிடெட், ஓஸ்மானாபாத் மஹாராஷ்டிரா வங்கிக்கு, நவம்பர் 13, 2017 தேதியில் வங்கியின் வர்த்தகத்தை முடித்த நாளில், வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949)-ன் (அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்) பிரிவு 35A, (1)-ன் கீழ் ஆறு மாதங்களுக்கு வழிகாட்டுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டது. தற்பொழுது இந்திய ரிசர்வ் வங்கி, மேலும் ஆறு மாதங்களுக்கு மே 14, 2018 முதல் நவம்பர் 13, 2018 வரை நீட்டித்து உத்தவிட்டுள்ளது. இந்த உத்தரவுகள், வைப்புகளை திரும்பப் பெறுதல் / ஏற்றுக்கொள்வது குறித்த சில கட்டுப்பாடுகள் மற்றும் / அல்லது வரம்புகளை வரையறுக்கிறது. விளக்கமான உத்தரவின் நகல் பொதுமக்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களது பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படுகிறது. சூழ்நிலைக்கேற்ப, இந்திய ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்களைக் கொண்டுவரக் கருதலாம். இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவுகள் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதக்கூடாது. இந்த வங்கியானது நிதிநிலை மேம்படும்வரை வங்கி வர்த்தகத்தைக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் தொடரலாம்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிகை வெளியீடு – 2017-2018/3007 |