மே 16, 2018
தி யுனைடெட் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், பாக்னன் ஸ்டேஷன் ரோடு
(வடக்கு), பாக்னன் அஞ்சல், ஹௌரா மாவட்டம், மேற்கு வங்காளம்
வங்கியின் மீது அபராதம் விதிக்கப்படுகிறது
தி யுனைடெட் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், பாக்னன் ஸ்டேஷன் ரோடு (வடக்கு), பாக்னன் அஞ்சல், ஹௌரா மாவட்டம், மேற்கு வங்காளம் வங்கியின் மீது இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 5.00 லட்சம் (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) பண அபராதத்தை விதித்துள்ளது. வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (c) மற்றும் 46 (2) (4) (i) உடன் இணைந்த கருத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தொடர்ந்து மேற்படி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வழிகாட்டுதல்களை கீழ்க்கண்டவாறு மீறிய காரணத்திற்காக மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய ரிசர்வ் வங்கியின் ஜூலை 1, 2015 தேதியிடப்பட்ட முதன்மைச் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி உத்தரவுகள் / வழிகாட்டுதல்களின்படி, செயல்பாட்டு பகுதி, கிளை அங்கீகாரக் கொள்கை, முகப்புகள் திறப்பது / முகப்புகள் விரிவாக்கம், ஏடிஎம்களின் திறப்பு / மேம்படுத்தல் / பிரித்தல் மற்றும் அலுவலகங்கள் மூடுவது ஆகியவை – மற்றும்
-
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) பிரிவு 35 (2).
மார்ச் 31, 2016 ஆம் ஆண்டின் நிதி நிலைக்கான ஆய்வின் முடிவில் இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கோரி வங்கிக்கு அறிவிப்பினை அனுப்பியது. மண்டல இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கி, கொல்கத்தா அவர்களின் தலைமையின் கீழ் உள்ள மூத்த அலுவலர்கள் குழுமத்திற்கு, வங்கி தனிப்பட்ட முறையில் பதிலை அளித்தது. இந்த விஷயத்தில் மூத்த அலுவலர்கள் குழுமத்திற்கு அளித்த உண்மைகளைப் பரிசீலித்த பிறகும் மற்றும் இது தொடர்பாக வங்கி அளித்த தனிப்பட்ட பதிலை ஆராய்ந்த பின்னரும், மேலே கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டு இந்திய ரிசர்வ் வங்கி அபராதத்தை விதித்துள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/3013 |